நாக சைதன்யாவின் புதிய பட டைட்டிலை அறிவித்த மகேஷ்பாபு | இ.வி.கணேஷ்பாபுவின் 'ஆநிரை' குறும்படத்திற்கு கோவா திரைப்பட விழாவில் பாராட்டு | பிரித்விராஜ் படத்தை ஓவர்டேக் செய்யும் சிறிய நடிகரின் படம் | சிறையில் இருக்கும் நிலையில் நடிகர் தர்ஷினின் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | கில்லி பாணியில் அடுத்த படத்தை இயக்கும் கீர்த்தீஸ்வரன் | 'திரெளபதி 2' படத்தில் ரக்ஷனாவின் பர்ஸ்ட் லுக் வெளியீடு | ஜிம்மில் பீஸ்ட் மோடில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா | நடிகர் அஜித்துக்கு 'ஜென்டில்மேன் டிரைவர்' விருது | பிப்ரவரியில் அஜித் படம் தொடங்குகிறது : ஆதிக் ரவிச்சந்திரன் சொன்ன புது தகவல் | நீங்க ஹீரோ ஆக வேணாம்னு சொன்னாரு : பார்க்கிங் தயாரிப்பாளரை கலாய்த்த சிவகார்த்திகேயன் |

விஜய்சேதுபதி நடிக்கும் பாலிவுட் படம் 'மெரி கிறிஸ்துமஸ்'. இந்த படத்தில் அவரது ஜோடியாக பாலிவுட் முன்னணி நடிகை கத்ரினா கைப் நடித்துள்ளார். இவர்கள் தவிர தமிழ் கலைஞர்களாக ராதிகா சரத்குமார், சண்முகராஜன், ராஜேஷ், காயத்ரி ஆகியோரும் நடித்துள்ளனர். ராதிகா ஆப்தே முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார். ஸ்ரீராம் ராகவன் இயக்கி உள்ளார்.
இந்த படத்தின் புரமோசன் நிகழ்வுக்காக சென்னை வந்திருந்த கத்ரினா கைப் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது: சென்னை எனக்கு புதிய நகரமல்ல எனது இரண்டாவது தாய்வீடு. எனது தாயார் தமிழ்நாட்டில் தான் ஏழைகளுக்கு மருத்துவ பணிகளும், கல்வி பணிகளும் செய்து வருகிறார். சென்னையில்தான் இருக்கிறார்.
ஏற்கெனவே நான் மலையாளம், தெலுங்கு படங்களில் நடித்திருக்கிறேன். தமிழில் நடித்ததில்லை. இந்த படத்தின் முலம் தமிழுக்கு வருவதில் மகிழ்ச்சி. விஜய்சேபதி திறமையான நடிகர் என்று தெரியும். அவரை பற்றி நிறைய கேள்விப்பட்டிருக்கிறேன். அவர் நடித்த 96 படத்தை பார்த்து வியந்திருக்கிறேன். அவருடன் நடித்தபோது நடிக்க வேண்டிய காட்சி பற்றி நிறைய விவாதித்து, ஒத்திகை பார்த்துதான் நடித்தேன். பல ஹீரோக்களுடன் நான் இணைந்து நடித்திருப்பதால் எனக்கு பயமோ தயக்கமோ எப்போதும் ஏற்பட்டதில்லை.
எனக்கென்று எந்த திட்டமிடலும் வைத்துக் கொள்ள மாட்டேன். அந்தந்த நேரத்தில் என்ன நடக்கிறதோ அதை ஏற்றுக் கொண்டு பயணிப்பேன். இந்த படம் அப்படித்தான் அமைந்தது. முதலில் இந்தியில் மட்டும் உருவாக்க முடிவு செய்திருந்தோம். பின்னர் தமிழையும் இணைத்துக் கொண்டோம். இப்படித்தான் நான் இதில் நடித்தேன். இந்த படத்திற்கு பிறகு தமிழ் படத்தில் நடிக்க வேண்டும் என்று திட்டமிட மாட்டேன். மெனக்கெடவும் மாட்டேன். அதுவாக அமைந்தால் மொழியை காரணம் காட்டி மறுக்க மாட்டேன். தமிழ் மொழி மட்டுமல்ல எல்லா மொழிக்கும் இது பொருந்தும். என்றார்.