குட் பேட் அக்லி டிரைலர் எப்போது? | பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார் | ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் |
பள்ளிப் பருவ காதல் படமாக உருவாகும் 'நினைவெல்லாம் நீயடா' படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்துக்கு ஆதிராஜன் என்பவர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி, இயக்குகிறார். நாயகனாக பிரஜின், நாயகிகளாக மனிஷா யாதவ், சினாமிகா ஆகியோர் நடித்துள்ளனர். இந்த படத்துக்காக பிரஜினும், மனிஷா யாதவும் உதட்டோடு உதடு முத்தமிடுவது போல் புகைப்படம் எடுக்க இயக்குனர் ஆதிராஜன் விரும்பியுள்ளார். ஆனால் பிரஜினை முத்தமிட்டு போஸ் கொடுக்க மனிஷா யாதவ் மறுத்துவிட்டார்.
பின்னர் 'வச்சேன் நான் முரட்டு ஆசை எனக்கேதான் மிரட்டும் மீசை' என்ற பாடல் காட்சியை படமாக்கியபோது மீண்டும் மனிஷாவை அணுகி உதட்டோடு உதடு முத்தமிடும் காட்சியில் நடிக்கும்படி வற்புறுத்தினார். அதற்கும் முத்த காட்சியில் நடிக்கவே மாட்டேன் என மனிஷா யாதவ் மறுத்துள்ளார். அதற்கு பதிலாக பிரஜின் கன்னத்தில் மட்டும் முத்தமிட்டு நடித்துள்ளார். இதனால் மனிஷா மீது இயக்குனர் அதிருப்தியில் உள்ளாராம்.