ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
மீசைய முறுக்கு, கோடியில் ஒருவன், திருவின் குரல் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ஆத்மிகா. சமீபகாலமாக ஆன்மிகத்திலும், சமூக சேவைகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வரும் ஆத்மிகா, சமீபத்தில் இமயமலையில் உள்ள பாபாஜி குகைக்கு சென்று தியானம் செய்திருக்கிறார்.
அது குறித்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டிருக்கும் ஆத்மிகா, ‛‛எனக்கு தெய்வீக அழைப்பு ஒன்று வந்த போது அங்கு பயணித்தேன். இந்த பயணம் கடினமாகவும் மரண அனுபவத்தை எதிர்கொள்ளும் பயணமாகவும் இருந்தது. என்றாலும் பாபாஜியின் குகையில் நுழைந்து தியானத்துக்கு உட்கார்ந்த போது அது ஆழமானதாக இருந்தது. என்னுடைய வாழ்நாளில் இதுபோன்ற சக்தியை நான் அனுபவித்ததில்லை. இந்த தியானத்திற்கு பிறகு நிபந்தனையின்றி பாபாஜியை குருவாக ஏற்றுக் கொண்டேன். உலகில் உள்ள எந்த ஒரு மனிதரும் தங்களுடைய வாழ்நாளில் ஒரு முறையாவது பாபாஜியின் குகைக்கு சென்று தியானம் செய்து அதை அனுபவிக்க வேண்டு''ம் என்று ஆத்மிகா அந்த பதிவில் தெரிவித்து இருக்கிறார்.