பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

அட்லி இயக்கத்தில் ஷாரூக்கான் நடிப்பில் ஹிந்தியில் உருவாகியிருந்த ஜவான் திரைப்படம் வெளியாகி உள்ளது. தொடர்ந்து விஜய் படங்களை இயக்கி முன்னணி வரிசைக்கு உயர்ந்த இயக்குனர் அட்லி, முதல் முறையாக பாலிவுட்டுக்கு சென்று அதுவும் அங்குள்ள முன்னணி ஹீரோவை வைத்து படம் இயக்கி இருப்பது இங்குள்ள ரசிகர்களுக்கு மட்டுமல்லாது, அவரது நட்பு வட்டாரத்தில் உள்ள சக இயக்குனர்களுக்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ‛ஜவான்' பட குழுவினருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் இந்த படம் மிகப்பெரிய பிளாக் பஸ்டர் வெற்றி பெறும் என்றும் கூறியுள்ளார். இதற்கு நன்றி தெரிவித்துள்ள ஷாரூக்கான், ‛‛மிகவும் நன்றி லோகேஷ். உங்களுக்கு எப்போதாவது நேரம் கிடைக்கும் போது ஜவான் படத்தை தமிழில் பாருங்கள், பார்த்துவிட்டு நாங்கள் சரியாக செய்திருக்கிறோமா என்று கூறுங்கள். லியோ படத்திற்கு எனது அன்புகள்'' என கூறியுள்ளார்.
இதற்கு பதில் அளித்துள்ள லோகேஷ், ‛‛நிச்சயமாக நீங்கள் சரியானதை தான் செய்திருக்கிறீர்கள், விரைவில் ஜவான் படத்தை பார்ப்பேன். அதேபோல லியோ படத்தை உங்களுடன் அமர்ந்து பார்த்து உங்களது கருத்துக்களை அறிந்து கொள்ள விரும்புகிறேன்'' என்று கூறியுள்ளார்.