டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களின் வெற்றியை தொடர்ந்து நடிகை அனுஷ்கா மிகப்பெரிய ரவுண்டு வருவார் என்றும், பாலிவுட்டுக்கும் செல்வார் என்றும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பாகுபலிக்கு பிறகு இத்தனை வருடங்களில் வெகு சில படங்களில் மட்டுமே நடித்துள்ளார் அனுஷ்கா. அந்த வகையில் தற்போது 'கத்தனார்' என்கிற படத்தின் மூலம் மலையாளத்திலும் முதல் முறையாக அடியெடுத்து வைக்கிறார் அனுஷ்கா. இந்த படத்தில் ஜெயசூர்யா கதாநாயகனாக நடிக்கிறார்.
சமீபத்தில் தன்னுடைய ஹோம் என்கிற படத்திற்காக தேசிய விருது பெற்ற இயக்குனர் ரோஜின் தாமஸ் இந்த படத்தை இயக்குகிறார். வரலாற்று பின்னணியில் உருவாகி வரும் இந்த படம் இரண்டு பாகங்களாக தயாராகி வருகிறது. இதன் முதல் பாகம் வரும் 2024ல் வெளியாக இருக்கிறது. இந்த படத்தில் கிளிம்ப்ஸ் வீடியோ தற்போது வெளியாகி உள்ளது. அதே சமயம் இதில் அனுஷ்காவின் பெயரை குறிப்பிட்டு இருந்தாலும் அவரது காட்சிகள் எதுவும் இடம்பெறாமல் அதில் ஒரு சஸ்பென்ஸை நீட்டித்துள்ளார்கள்




