பெங்களூருவின் புகழ் பெற்ற ஊர்வசி தியேட்டர் நிரந்தர மூடல் | காமெடி முதல் கிரைம் த்ரில்லர் வரை : இந்த வார ஓடிடி ரிலீஸ்......! | வாரணாசி-க்கு பின்னணி இசை அமைப்பது எப்போது... : கீரவாணி கொடுத்த அப்டேட் | 'சர்வம் மாயா' நாயகிக்கு பாராட்டுடன் பரிசும் அனுப்பிய சூர்யா ஜோதிகா | நன்றி சொன்னார் எஸ்.பி.முத்துராமன் : கண்கலங்கினார் வி.சி.குகநாதன் | ஹனிரோஸுக்கு ஜிஎஸ்டி துறை அனுப்பிய நோட்டீசை தள்ளுபடி செய்த கேரள உயர்நீதிமன்றம் | நடிகர் ஜெயசூர்யாவின் 39 லட்சம் மதிப்புள்ள சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை | கேரளா பிளஸ் 2 மாதிரி தேர்வில் மோகன்லாலின் சினிமா பயணம் குறித்து கேள்வி | அஞ்சு ரூபாய் டாக்டர் போன்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் மம்முட்டி | 'வேள்பாரி' வேலைகளில் தீவிரம் காட்டும் ஷங்கர் |

இயக்குனர் மோகன் ராஜா கடந்த 2011ல் விஜய்யை வைத்து ' வேலாயுதம்' படத்தை இயக்கினார். அந்த படம் ரசிகர்களிடையே சுமாரான வரவேற்பைப் பெற்றது. ஆனாலும், அதன் பிறகு ஒவ்வொரு முறையும் விஜய் புதிய படத்திற்கு கதை கேட்கும் போது மோகன் ராஜா பெயர் அடிபடும்.
சமீபத்தில் மோகன் ராஜா அளித்த பேட்டி ஒன்றில், "வேலாயுதம் படத்திற்கு பிறகு விஜய்-க்கு இரட்டை வேடத்தில் ஒரு கதையை உருவாக்கினேன். அந்த கதை அவருக்கும் பிடித்திருந்தது. ஆனால், அந்த சமயத்தில் தடம் படம் வெளிவந்தது. தடம் படத்திற்கு நான் உருவாக்கிய கதைக்கும் நிறைய ஒற்றுமை இருந்தது. இப்போது அந்த கதையில் நிறைய மாற்றங்கள் செய்துள்ளேன். இது அல்லாமல் புதிதாக இரண்டு கதைகள் விஜய்க்கு தயார் செய்துள்ளேன். விரைவில் விஜய் உடன் இணைவேன்'' என தனது ஆசையை தெரிவித்துள்ளார் மோகன் ராஜா.




