ஒரே நாளில் தமிழ், தெலுங்கில் இரண்டு முக்கிய ரீரிலீஸ் | 50 கோடி வசூல் கடந்த 'பாகுபலி தி எபிக்' | கோயில் பொக்கிஷ பின்னணியில் உருவாகும் புராண திரில்லர் ‛நாகபந்தம்' | இயக்குனரை தேர்ந்தெடுத்த கதை | ஐஸ்வர்யா ராஜேஷின் தெலுங்கு படம் அறிவிப்பு | வெளியீட்டிற்கு முன்பே லாபம் சம்பாதிக்கும் 'ஜனநாயகன்' | விஷால் 8 கோடி மோசடி குறித்து அரசு அறிக்கை: தயாரிப்பாளர் சங்க தலைவர் தகவல் | பிளாஷ்பேக்: முரளி இரண்டு வேடங்களில் நடித்த படம் | பிளாஷ்பேக்: தமிழில் படமான நோபல் பரிசு எழுத்தாளரின் கதை | பீடி, சுருட்டு குடிக்க பயிற்சி எடுத்த கீதா கைலாசம் |

தமிழில் அஜித், சூர்யா, மாதவன், விஷால் போன்ற நடிகர்களின் படத்தில் நடித்தவர் நடிகை சமீரா ரெட்டி. இது அல்லாமல் தெலுங்கு, இந்தி ஆகிய மொழி படங்களிலும் கதாநாயகியாக நடித்துள்ளார் . திருமணத்திற்கு பிறகு உடல் எடை கூடியதால் பட வாய்ப்புகள் குறைந்ததாக கூறப்படுகிறது.
சமீபத்தில் சமீரா ரெட்டி அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறியதாவது; "சினிமாவில் நான் படங்களில் பிஸியாக நடித்து வந்த நேரத்தில் திருமணம் செய்து கொண்டேன். திருமணத்துக்கு முன்பு நான் கர்ப்பமானதாக நிறைய வதந்திகள் பரவின. ஆனால், அதில் உண்மை இல்லை. திருமணத்துக்கு பிறகு தான் எனக்கு மகன் பிறந்தான். குழந்தை பிறந்த பிறகு ஹார்மோன்களின் சமநிலையற்ற தன்மையால் உடல் எடை கூடி குண்டாகி விட்டேன். இதனால் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் என்னை உருவ கேலி செய்தார்கள். அவர்களுக்கு பயந்தே நான் வெளியே செல்வதை நிறுத்தி விட்டேன். " என இவ்வாறு வருத்தப்பட்டு தெரிவித்தார் சமீரா ரெட்டி.




