உதய்ப்பூர் புகைப்படங்களை தனித்தனியே பகிரும் விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா | புது முகங்களின் 'ஹைக்கூ ' | 'காந்தாரா' வழக்கு ரத்து செய்ய ரன்வீர் சிங் மனு | சென்னையில் மீண்டும் சிம்பொனி இசை நிகழ்ச்சி நடத்தும் இளையராஜா | 'கல்கி 2' படப்பிடிப்பு அப்டேட் தந்த அமிதாப் பச்சன் | பிளாஷ்பேக் : டப்பிங் கலைஞர் பாரதிராஜா | பிளாஷ்பேக் : தமிழ் படத்தை தணிக்கை செய்த ஜவஹர்லால் நேரு | ஜமா இயக்குனரின் அடுத்த படம் நிறைவு | ரஜினி படப்பிடிப்பு எப்போது : சிபி சக்கரவர்த்தி சொன்ன பதில் | படங்கள் இல்லை : சிங்கிள் தியேட்டர்களுக்கு மீண்டும் சிக்கல்… |

ஏ.ஆர்.ரஹ்மான் திரைத்துறையில் என்ட்ரி கொடுத்து 30 ஆண்டுகள் முடிவடைந்ததை அடுத்து, நேற்று சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் ஒரு இசை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. திறந்தவெளி மைதானத்தில் நடந்த இந்த இசை நிகழ்ச்சியை ரசிக்க ஏராளமான ரசிகர்கள் படையெடுத்தார்கள். ஆனால் அப்போது திடீரென மழை பெய்ததால் மைதானத்தில் தண்ணீர் தேங்கியது. இதனால் நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்கள்.
இப்படி தனது இசை நிகழ்ச்சி ரத்தானது குறித்து டுவிட்டரில் ரசிகர்களுக்கு வருத்தம் தெரிவித்த ஏ.ஆர். ரஹ்மான் ஆறுதல் கூறியிருந்தார். அதோடு அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் சென்னையில் சர்வதேச தரத்தில் இசை நிகழ்ச்சிக்கான கட்டமைப்பு ஏற்படுத்தப்படும் என்று தான் நம்புவதாகவும் அந்த பதிவில் தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் பதிவுக்கு முதல்வர் ஸ்டாலின் உடனடியாக பதில் கொடுத்துள்ளார். சென்னையின் நீண்ட நாள் ஆசை விரைவில் நிறைவேறும். கிழக்கு கடற்கரைச் சாலையில் பெரிய அளவிலான நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு கலைஞர் கன்வென்ஷன் சென்டர் அமையவுள்ளதாக ஸ்டாலின் அந்த பதிவில் தெரிவித்திருக்கிறார்.