நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து முடித்துள்ள லியோ படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். அதோடு இப்படம் விஜய் பாணி அல்லாமல் முழுக்க முழுக்க லோகேஷ் கனகராஜின் பாணியில் உருவாகி இருக்கிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார்.
இந்நிலையில் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா அக்டோபர் மாதத்தில் மலேசியா அல்லது துபாய் நாட்டில் நடைபெற இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம், விஜய் படங்களின் வெளிநாட்டு வியாபார வட்டம் தற்போது விரிவடைந்துள்ளது. அதன் காரணமாக தங்களது நாடுகளில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை நடத்தினால் அது படத்திற்கும் ஒரு நல்ல பிரமோஷனாக இருக்கும் என்றும் அங்குள்ள விநியோகஸ்தர்கள் கேட்டுக்கொண்டு வருகிறார்களாம். அதன் காரணமாகவே லியோ படத்தின் இசை விழா துபாய் அல்லது மலேசியாவில் நடைபெறுவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக லியோ பட வட்டாரங்களில் கூறுகிறார்கள்.