ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி |
2023ம் ஆண்டின் ஏழு மாதங்கள் நேற்றோடு முடிந்துவிட்டது. அடுத்த ஐந்து மாதங்கள் தமிழ் சினிமாவில் முக்கியமான மாதங்கள் என்று சொல்லலாம். மாதத்திற்கு ஒரு பெரிய படமாவது வெளியாவது உறுதி என்ற நிலை உள்ளது.
இந்த ஆகஸ்ட் மாதம் 10ம் தேதி ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர்' படம், செப்டம்பர் மாதம் 'சந்திரமுகி 2, மார்க் ஆண்டனி', அக்டோபர் மாதம் 'லியோ', நவம்பர் மாதம் 'அயலான், ஜிகர்தண்டா 2, ஜப்பான்' டிசம்பர் மாதம் 'கேப்டன் மில்லர்' என சில முக்கிய படங்கள் அணிவகுத்து நிற்கின்றன. அவற்றிற்கிடையில் எந்த வாரத்தில் கொஞ்சம் வழி கிடைக்கிறதோ அங்கு தங்களது படங்களை வெளியிட சிறிய படங்களின் தயாரிப்பாளர்களும், இரண்டாம், மூன்றாம் கட்ட நடிகர்களின் படங்களைத் தயாரித்துள்ளவர்களும் வெளியிட்டாக வேண்டும்.
அடுத்த வாரம் 'ஜெயிலர்' வர உள்ள நிலையில் இந்த வாரத்திலேயே குறிப்பிடும்படியான படங்கள் எதுவும் வரவில்லை. “பிரியமுடன் ப்ரியா, சான்றிதழ், லாக்டவுன் டைரி, வெப், கல்லறை” ஆகிய படங்கள் ஆகஸ்ட் 4ம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவற்றில் 'வெப்' படத்தின் நடிகரான 'நட்டி' மட்டுமே ரசிகர்களுக்குத் தெரிந்த முகம். முன்னணி நடிகர்களின் படங்களுக்கு மட்டுமே தியேட்டர்களுக்கு வரும் ரசிகர்கள் இந்த சிறிய படங்களுக்கும் ஆதரவு தருவார்களா என்பது யோசனைக்குரியது.