ரஜினி, கமல் இணையும் படம்: லதா ரஜினிகாந்த் சொன்ன தகவல் | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் 'கார்மேனி செல்வம்' புதிய ரிலீஸ் தேதி | மீண்டும் சிரஞ்சீவி படத்திற்கு இசையமைக்கும் தமன்! | என் போட்டோவை மார்பிங் செய்கின்றனர்!: ரச்சிதா ஆதங்கம் | ரொமான்டிக் திரில்லர் கதையில் உருவாகும் 'ஆசை' | 'கேம் ஆப் த்ரோன்ஸ்' புதிய தொடர் வெளியானது: உலகம் முழுக்க வரவேற்பு | 'மாஸ்டர் பிளான்' படத்தில் பொலிட்டிக்கல் பிளாக் காமெடி | வில்லனாக நடிக்க விரும்பும் முனீஷ்காந்த் | பிளாஷ்பேக்: 'நிழல்கள்' ராதுவை தெரியுமா? | பிளாஷ்பேக்: ஒரே படத்தில் 3 பேருக்கு வாழ்வளித்த கண்ணதாசன் |

நடிகர் தனுஷ் தற்போது தனது 50வது படத்தை இயக்கி, நடித்து வருகிறார். .ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். சென்னை ஈ.சி.ஆரில் 500 வீடுகள் கொண்ட பிரமாண்டமான வட சென்னை அரங்கம் அமைத்து படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என ஏற்கனவே தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் தனுஷ் பிறந்தநாளை முன்னிட்டு கேப்டன் மில்லர் டீசரை படக்குழுவினர்கள் வெளியிட்டுள்ளனர். இதனை கொண்டாடும் விதமாக ஐதராபாத்தில் உள்ள ஒரு தனியார் தியேட்டரில் 'வேலையில்லா பட்டதாரி' திரைப்படத்தை ரீ ரிலீஸ் செய்து அதனுடன் 'கேப்டன் மில்லர் டீசரை' திரையிட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சந்தீப் கிஷன் கலந்து கொண்டார். அவர் கூறியதாவது, "கேப்டன் மில்லர் படத்தை தொடர்ந்து தனுஷ் அண்ணா இயக்கி, நடிக்கும் தனுஷ் 50வது படத்திலும் நான் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறேன்'' என அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்.




