பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் | உங்களை ஏமாற்ற மாட்டேன் லாலேட்டா : மோகன்லால் மகளை அறிமுகப்படுத்தும் இயக்குனர் உறுதி | சினிமாவில் ஒரு வட்டத்துக்குள் சிக்க விரும்பவில்லை: கிரேஸ் ஆண்டனி |
கன்னடத்தில் கடந்த 2009ல் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ராகினி திவேதி. தமிழில் நிமிர்ந்து நில் என்கிற படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளார். கடந்த 2020ல் போதைப்பொருள் குற்றச்சாட்டிற்கு ஆளாகி சிறைச்சாலைக்கும் சென்று வந்து பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கடந்த ஐந்து வருடங்களாக இவரது நடிப்பில் எந்த ஒரு படமும் வெளியாகவில்லை. இந்த நிலையில் தற்போது மலையாளத்தில் இவர் நடித்துள்ள ஷீலா என்கிற திரைப்படம் வெளியாகி உள்ளது.
சில உண்மைகளை தேடி கர்நாடகாவில் இருந்து கேரளாவிற்கு பயணிக்கும் ஒரு இளம்பெண் எதிர்கொள்ளும் நிகழ்வுகளை மையப்படுத்தி நிஜத்தில் நடைபெற்ற சம்பவங்களின் அடிப்படையில் இந்த படம் உருவாகி உள்ளது. இதற்கு முன்னதாக கடந்த 2010ல் மோகன்லாலுடன் காந்தகார் மற்றும் 2012ல் மம்முட்டியுடன் பேஸ்புக் 2 பேஸ் ஆகிய படங்களில் நடித்துள்ள ராகினிக்கு 11 வருட இடைவெளிக்கு பிறகு மீண்டும் மலையாளத்தில் அவர் நடித்துள்ள படம் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.