பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு |
தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வருகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் பள்ளியில் படிக்கும் மாணவ - மாணவிகள் மதுபானங்களை குடிக்கும் அதிர்ச்சி செய்திகளும், புகைப்படங்களும் வெளியாகி வருவது தான். இந்த நிலையில் இரண்டு இளம் பெண்கள் டாஸ்மாக்கில் மதுபானம் வாங்கும் வீடியோ ஒன்றை நடிகை கஸ்தூரி வெளியிட்டுள்ளார்.
அதோடு,
தண்ணியடி, பெண்ணே தண்ணியடி!
எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண்
இளைப்பில்லை காணென்று தண்ணியடி.
அப்ப பெண்கள் உரிமை தொகை சிந்தாம சிதறாமல் திரும்பிவிடும் என்று பதிவிட்டு உள்ளார்.
இதையடுத்து கஸ்தூரி வெளியிட்ட இன்னொரு பதிவில், தவறான பாதையில் போகும் சில பெண்களை பற்றிய பதிவே இது. அவர்களது பணம் பற்றியே கூறியுள்ளேன். மதுக்கடையில் பெண்கள் நிற்கும் நிலையை யாரும் கண்டிக்க மாட்டீர்கள். அது யாருக்கு என்றாலும், பெண்களின் உரிமை பணம் ஆண்களின் தவறான செயல்களுக்கு பலியாகக்கூடாது என்றும் பதிவிட்டுள்ளார் கஸ்தூரி.
அவரது இந்த பதிவுகளுக்கு வழக்கம் போல் சோசியல் மீடியாவில் பாசிட்டிவ், நெகட்டிவ் என இரண்டு விதமான கமெண்டுகளும் வெளியாகி வருகிறது.