ஹரிஷ் கல்யாண் நடிக்கும் 'தாஷமக்கான்' | மணிரத்னம் படத்தில் நடிக்க மறுத்தாரா சாய் பல்லவி? | நெட்பிளிக்ஸ் முடிவு : அதிர்ச்சியில் தென்னிந்திய திரையுலகம் | விமலின் மகாசேனா படம் டிசம்பர் 12ல் திரைக்கு வருகிறது | பராசக்தி பட டப்பிங்கில் அதர்வா | கோவா சர்வதேச பட விழாவில் அமரன் : சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | எங்களைப் பொறுத்தவரை உபேந்திரா தெலுங்கின் சூப்பர் ஹீரோ தான் : ராம் பொத்தினேனி | ப்ரோ கோட் டைட்டில் விவகாரம் : நீதிமன்ற விசாரணையில் ரவி மோகனுக்கு சாதகம் | ‛கில்' பட ரீமேக்கில் இருந்து விலகிய துருவ் விக்ரம் | வாட்ச் மீதுள்ள காதல் குறித்து தனுஷ் |

பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களை தொடர்ந்து உதயநிதி, வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கி உள்ள படம் மாமன்னன். கடந்த ஜூன் 29ம் தேதி திரைக்கு வந்து இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் இரண்டு வாரங்களை கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படத்தின் வசூல் 52கோடியை கடந்ததாக சக்சஸ் மீட் நிகழ்ச்சியில் படக்குழுவினரே தெரிவித்தனர்.
இந்த நிகழ்வில் பேசிய இயக்குனர் மாரி செல்வராஜ், ‛‛மாமன்னன் படத்தில் நடித்த நடிகர் - நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். அதையடுத்து என்னுடைய வாழ்க்கையில் பலமுறை நான் தற்கொலை செய்து கொள்ள நினைத்து இருக்கிறேன். அப்படி ஒரு முறை நான் தற்கொலைக்கு முயற்சி செய்தபோது வடிவேலு நடித்த காமெடியை பார்த்த நான், அந்த தற்கொலை முடிவை மாற்றிக் கொண்டேன். அந்த வகையில் என்னை தற்கொலை முயற்சியில் இருந்து காப்பாற்றியவர் வடிவேலு தான் என்று நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.




