மிஸ் யூ படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | இயக்குனர் பாலாவிற்கு விழா | விவாகரத்து அல்லது பிரேக்கப் ஒரு பெண்ணின் வாழ்க்கையில் சிறந்த தருணம் ; ஐஸ்வர்ய லட்சுமி அதிரடி | வருகிறது 'புஷ்பா 3': சொல்லாமல் சொன்ன வைரல் புகைப்படம் | சைப் அலிகான் - நிகிதா தத்தா நடித்த ‛ஜூவல் தீப்' படப்பிடிப்பு நிறைவு | ‛இட்லி கடை' படத்தின் பிளாஷ்பேக் காட்சிகளில் 20 வயது தனுஷ் | ரொமான்ஸ் இல்லாத கணவர் ; பிரித்விராஜை கலாய்த்த மனைவி | கடைசி நேரத்தில் சன்னி லியோன் வருகைக்கு தடை போட்ட போலீசார் ; ரசிகர்கள் ஏமாற்றம் | மாலத்தீவில் பிகினி உடையில் உச்சக்கட்ட கவர்ச்சிக்கு சென்ற வேதிகா | போதும் மகளே.. அபர்ணா பாலமுரளியிடம் கையெடுத்து கும்பிட்ட தந்தை |
'பத்து தல' படத்திற்குப் பிறகு சிலம்பரசன் நடிக்கும் அவரது 48வது படத்தை நடிகர் கமல்ஹாசன் அவரது படத் தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்க உள்ளார். 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்' படத்தை இயக்கிய தேசிங் பெரியசாமி இப்படத்தை இயக்க உள்ளார்.
சரித்திர காலப் படமாக இப்படம் உருவாக உள்ளது. இப்படத்திற்கான அடுத்த கட்ட நகர்வு குறித்து இயக்குனர் தேசிங், சிலம்பரசன் ஆகியோர் படத்தின் தயாரிப்பாளர் கமல்ஹாசனை சந்தித்துப் பேசியுள்ளனர்.
கமல்ஹாசனை சந்தித்தப் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்து, “நன்றி கமல்ஹாசன் சார்'' எனப் பதிவிட்டுள்ளார் சிம்பு. சரித்திரப் படத்தில் நடிப்பதற்காக தலைமுடியையும் கொஞ்சம் நீளமாக வளர்த்து வருகிறார் சிம்பு. 'ரத்தமும் பேரும் ஆரம்பம்' என படக்கழுவினர் படம் பற்றிய அப்டேட்டைக் கொடுத்துள்ளார்கள்.
அடுத்த சில வாரங்களில் படப்பிடிப்பு ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.