'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
தெலுங்குத் திரையுலகத்தில் ராஜ்-கோட்டி என்ற இரட்டை இசையமைப்பாளர்களில் ஒருவரான ராஜ் நேற்று காலமானார். அவரது மறைவுக்குத் தெலுங்கு சினிமா பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.
இந்தியத் திரையுலகத்தின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவரான ஏஆர் ரகுமான், அவரது ஆரம்ப காலங்களில் ராஜ்--கோட்டி--யிடம் கீ போர்டு வாசிப்பவராக சுமார் எட்டு ஆண்டு காலம் பணிபுரிந்துள்ளார். ராஜ் மறைவுக்கு அவர் தெரிவித்துள்ள இரங்கல் செய்தியில், “ஆழ்ந்த இரங்கல் சோமராஜு காரு, 80களில் ராஜ்--கோட்டி ஆகியோருடன் பணிபுரிந்த அந்த இனிமையான நினைவுகளை என்றுமே மறக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
ராஜ்--கோட்டி இருவரது இசையில் 80களில் வெளிவந்த பல படங்கள் சூப்பர் ஹிட் படங்களாகவும், அதில் பல பாடல்கள் சூப்பர் ஹிட் பாடல்களாகவும் அமைந்தவை.