அந்த மூணு சர்ப்ரைஸை தயவு செய்து சொல்லாதீங்க : இளன் வேண்டுகோள் | நயன்தாராவின் ‛மண்ணாங்கட்டி' படப்பிடிப்பு நிறைவு | ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளிப் போகிறதா இந்தியன் 2? | தீபிகா படுகோனேவை பிரிகிறாரா ரன்வீர் சிங் : பாலிவுட்டில் பரபரப்பு | விஜய்யின் கோட் படத்தில் நடிக்கிறாரா சிவகார்த்திகேயன்? | ராஜு மகாலிங்கத்தின் புதிய வீட்டிற்கு விசிட் அடித்த ரஜினி | சீரியல் நடிகை ஆர்த்தி சுபாஷ் வைரல் கிளிக்ஸ் | பாலாவின் காதலா? டிஆர்பி கேமா? - குழம்பிய ரசிகர்கள் | முடிவுக்கு வரும் ‛அருவி' சீரியல் | போலி கணக்கு துவங்கி ட்ரோல்களை சமாளித்த அனேகன் பட நாயகி |
ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ், கிரித்தி சனோன், சைப் அலிகான் மற்றும் பலர் நடிப்பில் உருவாகி வரும் 'ஆதி புருஷ்' படத்தின் 'ஜெய் ஸ்ரீராம்' பாடல் சற்று முன் யு டியூபில் வெளியிடப்பட்டது. தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் அப்பாடல் வெளியாகி உள்ளது.
அஜய் - அதுல் இசையமைப்பில் உருவாகியுள்ள அப்பாடலை முரளிதரன் எழுதியிருக்கிறார். பாடலை ஆண் பாடகர்கள் சிலரும், பெண் பாடகர்கள் சிலரும் குழுவாகப் பாடியிருக்கிறார்கள்.
காட்டில் ராமன், லட்சுமணன் ஆகியோர் அனுமன் மற்ற வானரக் கூட்டங்களுடன் நடந்து செல்ல, ராமன் வருகைக்காக, இலங்கையில் இராவணனால் சிறைபிடிக்கப்பட்ட சீதா காத்திருக்கும் காட்சிகள் அப்பாடலில் இடம் பெற்றுள்ளது. பாடலில் உள்ள விஎப்எக்ஸ் காட்சிகள் நல்ல தரத்தில் அமைந்துள்ளது.
ஜுன் மாதம் 16ம் தேதி 'ஆதி புருஷ்' உலகம் முழுவதும் வெளியாகிறது.