சின்னத்திரை : நடிகை பவித்ரா ஜெயராம் சாலை விபத்தில் மரணம் | புத்தகத்திற்கு பைபிள் பெயர் : கரீனா கபூருக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ் | இந்த ஆண்டில் கமல்ஹாசனின் 3 படங்கள் ரிலீஸ் | அன்னையர் தினத்தில் விக்னேஷ் சிவன் வெளியிட்ட வீடியோ | 'மைதான்' படம் தோல்வி : தயாரிப்பாளர் போனி கபூர் விளக்கம் | என்கிட்ட மோதாதே... நான் ராஜாதி ராஜனடா...! | உள்ளாட்சி தேர்தலை மையமாக வைத்து உருவாகி உள்ள ‛எலக்சன்' | நடிகை நவ்யா நாயரின் சென்னை நினைவுகள் | அஜித்திற்கு இப்படி ஒரு வினோத பிரச்சனை இருந்ததா ? சுந்தர்.சி கூறிய ஆச்சர்ய தகவல் | அல்லு அர்ஜுன் மீது ஆந்திர போலீசார் வழக்கு |
லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர், விக்ரம் படங்களில் நடித்தார் விஜய் சேதுபதி. தற்போது விஜய்யை வைத்து அவர் இயக்கி வரும் லியோ படத்திலும் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகின. ஆனால் சமீபத்தில் தான் அளித்த ஒரு பேட்டியில், லியோ படத்தில் தான் நடிக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தினார் விஜய் சேதுபதி.
இந்த நிலையில் லியோ படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவில்லை என்றாலும் அப்படத்தில் வில்லனாக நடிக்கும் பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு விஜய் சேதுபதி டப்பிங் கொடுக்கப் போவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது சென்னையில் நடைபெற்று வரும் லியோ படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் விரைவில் ஐதராபாத் விமான நிலையம் மற்றும் ராமோஜிராவ் பிலிம் சிட்டி போன்ற இடங்களில் படமாக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.