ரூ. 300 கோடி வசூலை நோக்கி நகரும் மகாவதார் நரசிம்மா | 'டியூட்' தீபாவளி ரிலீஸ் என மீண்டும் அறிவிப்பு : ஆக., 28ல் முதல் பாடல் | இந்த நடிகை என்னுடன் நடிப்பதற்காக பூஜை, பிரார்த்தனை செய்தேன் : அனுபமா பரமேஸ்வரன் | விஜய் பேச மாட்டார்... அஜித் பேசவே மாட்டார் : ஏ.ஆர் முருகதாஸ் | கேரள அரசு போக்குவரத்து ... மலரும் நினைவுகளில் மோகன்லால் | கைதி 2 படத்திற்கான கால்ஷீட்டை சுந்தர்.சிக்கு கொடுத்த கார்த்தி | அட்ரஸ் இல்லாத லெட்டருருக்கு நான் ஏன் பதில் போடனும்? விஜய்யின் பேச்சுக்கு கமல் பதில் | கார்த்தியின் படத்தில் வில்லனாக நடிக்கும் ஆதி | விஜயகாந்த் பற்றி விஜய்யின் 'அண்ணன்' பேச்சு : மகன் சண்முக பாண்டியன் சொன்ன பதில் | 300 கோடி வசூல் கடந்தும் நஷ்டத்தை சந்திக்கும் 'வார் 2' |
தெலுங்கு நடிகர் நாகார்ஜூனாவின் இளைய மகன் மற்றும் நடிகர் அகில் அக்கினேனி. இவர் நடித்து சமீபத்தில் வெளிவந்து ஏஜென்ட் திரைப்படம் மிகப் பெரிய தோல்வியாக அமைந்தது. அதனால் நெட்டிசன்கள் இவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர் .
இந்நிலையில் இவர் அடுத்த படத்தை குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அகில் உடைய 6வது படத்தை சாஹோ படத்தின் இணை இயக்குனர் அனில் குமார் இயக்குகிறார். யு.வி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு 'தீரா' என்று தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள். அகில் அக்கினேனி இதற்கு முன்பு ஜந்து படங்கள் நடித்துள்ளார் அந்த படத்திற்கெல்லாம் ஆங்கில தலைப்பு தான் வைத்துள்ளார். ஆனால், இப்போது தான் முதல் முறையாக தெலுங்கில் தலைப்பு வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.