டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

நடிகர் விஜய் இப்போது 'லியோ' படத்தில் நடித்து வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்நிலையில், நேற்று விஜய் மக்கள் இயக்கத்தின் முக்கிய நிர்வாகிகளை அழைத்து அவர் பாராட்டியுள்ளார். இது குறித்து விஜய் தரப்பில் விசாரித்தபோது, ‛திருச்சி, சேலம், நாமக்கல், தஞ்சாவூர், வடசென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் உள்ள விஜய் மக்கள் இயக்கத்தினர், ஏழைகளுக்குத் தினமும் விலையில்லா விருந்து வழங்கி வருகின்றனர்.
சில பகுதிகளில் காலை, மதியம் என 2 வேளை உணவு வழங்கி வருகின்றனர். நலத்திட்ட உதவிகள் செய்யும் மன்றத்தினரைப் பாராட்ட வேண்டும் என்று நடிகர் விஜய் முடிவு செய்தார். அதன்படி அவர்களைச் சென்னைக்கு அழைத்து நேற்று பாராட்டினார். அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்' என்றனர்.




