மீண்டும் தள்ளிப்போனது 'படை தலைவன்' ரிலீஸ் | 'ஸ்பிரிட்' படத்தை விட்டு வெளியேறிய தீபிகா படுகோனே! | அப்துல் கலாம் வாழ்க்கை வரலாற்றில் தனுஷ் | இலங்கையில் படமாகும் 'மதராஸி' பட கிளைமாக்ஸ்! | கமல் 237வது படத்தின் படப்பிடிப்பு எப்போது? புது தகவல் | சிவகார்த்திகேயன் கேட்டால் நகைச்சுவை வேடத்தில் நடிப்பீர்களா சூரி? சூரியின் பதில் இதோ.. | குபேரா படத்தின் இசை வெளியீட்டு விழா அப்டேட்! | போதைப்பொருள் பயன்படுத்த தனி ரூம் வசதி ; பெண் தயாரிப்பாளர் பகீர் குற்றச்சாட்டு | வார்-2வில் விஜய்யின் ஸ்டைலை காப்பி அடித்த ஹிருத்திக் ரோஷன் | தள்ளிப்போகும் 'தொடரும்' பட ஓடிடி ரிலீஸ் |
இந்திய ரசிகர்களால் கிரிக்கெட்டின் கடவுளாகவே பார்க்கப்பட்ட, பாராட்டப்பட்ட கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் உலக அளவிலும் அதே போன்று பெருமையை பெற்றவர். எந்த ஒரு பிரபலம் என்றாலும் அவருடன் இணைந்து புகைப்படம் எடுத்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்தால் அதை தவற விட மாட்டார்கள். அப்படி நடிகர் சூர்யா, அவருடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை சமீபத்திய சோசியல் மீடியா சேட்டிங்கின்போது, சச்சினிடம் காட்டி இந்த சந்திப்பு குறித்து கூறுங்கள் என்று ரசிகர் ஒருவர் கேட்டிருந்தார்.
அவருக்கு பதில் அளித்த சச்சின், “நாங்கள் இருவருமே ஆரம்பத்தில் ரொம்பவே கூச்ச சுபாவத்துடன் இருந்தோம். மேலும் ஒருவரை ஒருவர் தொந்தரவு செய்ய வேண்டாமே என்றும் விரும்பினோம். ஆனால் போகப்போக அது ஒரு நல்ல உரையாடலாக மாறிய தருணமாக அமைந்தது” என்று கூறியுள்ளார். கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் சூர்யா சச்சினை நேரில் சந்தித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.