ஜூடோபியா : 9 ஆண்டுகளுக்கு பிறகு வரும் 2ம் பாகம் | 'தாரணி'யில் நடிகையின் கதை | போஸ் வெங்கட்டின் ஸ்போர்ட்ஸ் மூவி | பிளாஷ்பேக்: பிரிந்த இசை அமைப்பாளர்கள் | பிளாஷ்பேக்: முதல் பிளாஷ்பேக் படம் | பேயுடன் பர்ஸ்ட் நைட் கொண்டாடிய ஹீரோ: 'மெஸன்ஜர்' படத்தில் புதுமை | தெலுங்கில் தோல்வி அடைந்த பைசன்: தமிழில் விருதுகளை அள்ளுமா? | கடந்த 10 ஆண்டில் சினிமா தயாரிப்பாளர்கள் நிலை: இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கவலை | பணம் சம்பாதிக்க எத்தனையோ தொழில் இருக்குது.. அதுக்கு, ஆபாச படம் எடுக்கலாம்: பொங்கிய பேரரசு | இயக்குனர் ரஞ்சித் மீதான மற்றொரு பாலியல் வழக்கும் தள்ளுபடி |

அமரர் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கும் முயற்சி கடந்த 50 வருட காலத்திற்கு மேலாக நடைபெற்று வந்த நிலையில் இயக்குனர் மணிரத்னம் அந்த நாவலுக்கு உயிர் கொடுத்து அதை இரண்டு பாகங்கள் கொண்ட படமாக இயக்கியுள்ளார். கடந்த வருடம் செப்டம்பரில் அதன் முதல் பாகம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. வரும் ஏப்ரல் 28ல் இதன் இரண்டாம் பாகம் வெளியாக இருக்கிறது. இந்த கதையில் இடம்பெறும் அனைத்து கதாபாத்திரங்களுமே முக்கியமானவை என்பதால் இதற்காக பார்த்து பார்த்து நட்சத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்க வைத்துள்ளார் மணிரத்னம்.
அந்த வகையில் தற்போது இந்த இரண்டாம் பாகத்துக்கான புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார் மணிரத்னம். அப்படி ஒரு நிகழ்வில் அவரிடம், “இப்படி இரண்டு பாகங்களாக இந்த படத்தை எடுப்பதற்கு பதிலாக இதை ஒரு வெப்சீரிஸ் ஆக இயக்கியிருந்தால் உங்களுக்கு இன்னும் நிறைய சுதந்திரம் கிடைத்திருக்குமே ?” என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த மணிரத்னம், “உண்மைதான்.. ஆனால் அதற்கு நீண்ட காலம் பிடிக்கும் என்பதால் நடிகர்களின் தேதிகளை பெறுவது என்பது ரொம்பவே கடினமான வேலை.. அதனால் தான் திரைப்படமாக உருவாக்கி விட்டோம். ஐந்து பாகங்கள் கொண்ட பொன்னியின் செல்வன் நாவலை இரண்டு பாகங்கள் கொண்ட திரைப்படமாக மாற்றியதன் மூலம் அதற்கு நான் உரிய நியாயம் செய்திருக்கிறேனா என்று தெரியாது. ஆனால் நாவலை படமாக்கி விட்டோம் என்கிற திருப்தி எனக்கு இருக்கிறது” என்று கூறியுள்ளார்.