சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
தமிழ் சினிமாவின் 80'கள் காலக்கட்டத்தில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை ஐஸ்வர்யா. இவர் மூத்த நடிகை லெஷ்மியின் மகள் என்பது குறிப்பிடத்தக்கது. பட வாய்ப்புகள் இல்லாததால் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்து நடித்து வந்தார். ஆனால், அவருக்கான சரியான ரோல் எதுவும் கிடைக்காததால் தற்போது வருமானத்திற்காக சொந்தமாக யூ-டியூப் சேனல் நடத்தியும் ஹோம் பேஸ்ட் பிசினஸாக சோப் மற்றும் அழக சாதன பொருட்களை விற்பனை செய்தும் வருகிறார்.
ந்நிலையில், பிசினஸிற்காக தனது நம்பரை சோஷியல் மீடியாவில் வெளியிட்டிருந்த ஐஸ்வார்யாவுக்கு சிலர் அன்-டைமில் அசிங்கமாக மெசேஜ் செய்து டார்ச்சர் செய்துள்ளனர். இந்த வயதிலும் ஐஸ்வர்யா கவர்ச்சியாக இருப்பதாக ஆபாசமாக பேசி படுக்கைகக்கு அழைத்துள்ளனர். இதனால் பொறுமையிழந்த ஐஸ்வர்யா, தனது யூ-டியூப் சேனலில் தனக்கு தவறாக மெசேஜ் அனுப்பும் நபர்களின் பெயரை வெளியிட்டு அவர்களை கிழி கிழியென கிழித்துள்ளார். மேலும், சில ஸ்கிரீன்ஷாட்டுகளையும் காண்பித்து அவர்களை அம்பலப்படுத்தியுள்ளார். தனக்கு நடக்கும் பாலியல் சீண்டல்களை வெளிப்படையாக ஐஸ்வர்யாவுக்கு ஆதரவாக பலரும் ஸ்டேண்ட் வித் ஐஸ்வர்யா என கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.