இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் | விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி |
பெப்சி என்று அழைக்கப்படும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்திற்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். தற்போது ஆர்.கே.செல்வமணி தலைமையிலான நிர்வாகிகளின் பதவி காலம் நிறைவடைகிறது.
இதனால் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் வருகிற 23ம்தேதி சென்னை வடபழனியில் உள்ள சங்கத்தின் அலுவலத்தில் நடைபெற இருக்கிறது. இதில் தலைவர் பதவிக்கு ஆர்.கே.செல்வமணி மீண்டும் போட்டியிடுகிறார். அவர் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். அவரது அணி சார்பில் பொதுச்செயலாளர் பதவிக்கு தயாரிப்பு நிர்வாகிகள் சங்க செயலாளர் சுவாமிநாதன், பொருளாளர் பதவிக்கு டிரைவர்ஸ் யூனியன் தலைவர் செந்தில்குமார் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
இவர்கள் தவிர துணைத் தலைவர்கள் பதவிக்கு சபரிகிரிசன், தினா, மோகன மகேந்திரன், தவசிராஜ், மாரி ஆகியோரும், இணைச் செயலாளர்கள் பொறுப்புக்கு ராமலிங்கம், புருஷோத்தமன், சாஜிதா, ராஜ ரத்னம், ராமச்சந்திரன் ஆகியோரும் போட்டியிடுகிறார்கள்.
இந்த தேர்தலில் பெப்சி அமைப்பில் இணைந்திருக்கும் 24 சங்கங்களை சேர்ந்த தலைவர், செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகள் வாக்களித்து புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வார்கள்.