இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

மலையாளத்தில் நேரம், பிரேமம் என அடுத்தடுத்து சூப்பர் ஹிட் படங்களை இயக்கி மலையாளம் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தவர் இயக்குனர் அல்போன்ஸ் புத்ரன். சமீபத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு இவர் பிரித்விராஜ், நயன்தாராவை வைத்து இயக்கிய கோல்டு திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பை பெற தவறியது. இந்த நிலையில் அடுத்ததாக அவர் தனது புதிய படம் ஒன்றை தமிழில் இயக்க உள்ளார். இது குறித்த அறிவிப்பையும் சமீபத்தில் அவர் வெளியிட்டு இருந்தார்.
இந்த நிலையில் தனது புதிய படத்திற்கு தேவையான புதிய நடிகர்களை தேர்ந்தெடுத்து அறிமுகப்படுத்தும் விதமாக ஆடிசனுக்கு அழைப்பு விடுத்துள்ளார் அல்போன்ஸ் புத்ரன். இதற்கான தகுதியாக நடிப்பு, பாட்டு, டான்ஸ், ரீல்ஸ் வீடியோ, பெயிண்டிங் என எந்த அனுபவம் உள்ளவர்களும் விண்ணப்பிக்கலாம் என்றும் இது தமிழில் உருவாகும் படம் என்றாலும் எந்த மொழியை சேர்ந்தவர்களும், அவ்வளவு ஏன் 7 கண்டத்தில் உள்ளவர்களும் கூட இந்த ஆடிசனில் கலந்து கொள்ளலாம் என்றும் நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார் அல்போன்ஸ் புத்ரன்.
இதற்கு முன்னதாக அவர் நஸ்ரியா, சாய் பல்லவி, அனுபமா பரமேஸ்வரன், மடோனா செபாஸ்டியன் என நான்கு கதாநாயகிகளை அறிமுகப்படுத்தி தென்னிந்திய திரையுலகத்திற்கு தந்தவர் என்பதால் இந்த புதிய படத்திலும் கதாநாயகிகள் மற்றும் புதிய நடிகர்களையும் நிச்சயம் அல்போன்ஸ் புத்திரன் உருவாக்குவார் என எதிர்பார்க்கலாம்.