ரஜினி, கமல் கூட்டணி படம் : பிரதீப் ரங்கநாதன் பதில் | விஜய் ஆண்டனியின் அடுத்தபடம் பற்றிய தகவல் | நாகர்ஜூனாவின் 100வது படம் தொடங்கியது | பான் இந்தியா படம் : பிரசாந்த் ஆர்வம் | நான் அவனில்லை : இயக்குனர் பாரதி கண்ணன் விளக்கம் | 'காந்தாரா சாப்டர்1' காஸ்ட்யூம் டிசைன்: ரிஷப் ஷெட்டி மனைவி பிரகதி நெகிழ்ச்சி | 300 கோடி வசூல் படங்கள் : லாபக் கணக்கு எவ்வளவு ? | அடுத்த மல்டிபிளக்ஸ் திறக்கப் போகும் மகேஷ்பாபு | 50 கோடி வசூல் கடந்த 'இட்லி கடை' | என் அணிக்கு தமிழக அரசு ஸ்பான்சரா: அஜித் விளக்கம் |
இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், ஓம் பிரகாஷ் பட், நர்சிராம் சௌத்ரி ஆகியோருடன் இணைந்து தயாரித்துள்ள படம் 1947 ஆகஸ்ட் 16. இதில் கவுதம் கார்த்தி, ரேவதி ரிச்சர்ட், புகழ் உள்பட பலர் நடித்துள்ளனர். என்.எஸ்.பொன்குமார் இயக்கி உள்ளார். ஷான் ரோல்டன் இசை அமைத்துள்ளார்.
படத்தின் முதல் சிங்கிள் டிராக்கான 'கோட்டிகார பயலே' மற்றும் டீசர் இரண்டுமே வரவேற்பை பெற்றது. வேல்ஸ் பல்கலைக்கழகத்தில் இளைஞர்கள் மத்தியில் வெளியிடப்பட்ட முதல் சிங்கிள் டிராக் உடனடியாக பிரபலமடைந்தது. தற்போது படத்தின் பணிகள் இறுதிகட்டத்தை நெருங்கி உள்ளது.
இந்தியா 1947ம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி விடுதலை அடைந்தது. இந்த செய்தியை அறியாத கிராமத்து மக்கள் சுதந்திரம் அடைந்த மறுநாள் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராட கிளம்புவது மாதிரியான காமெடி படம் என்கிறார்கள். படம் வருகிற ஏப்., 7ம் தேதி வெளியாகிறது.