புருவ அழகுக்கு ஞாபக மறதி : அறிமுகப்படுத்திய இயக்குனர் தாக்கு | ராமனாக நடித்தது அதிர்ஷ்டம் - பிரபாஸ் | விஜய் பிறந்த நாளில் வெளியாகும் இரண்டு அப்டேட் | கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ஸ்வாரா பாஸ்கர் | மேகா ஆகாஷ் திருமண செய்தி உண்மையல்ல... | ஹீரோயினாக நடிக்கும் அஸ்மிதா | 23ம் தேதி வெளியாகிறது 'கேரளா கிரைம் பைல்ஸ்' | மைசூரில் ஜாலியாக ஊர் சுற்றும் ராம் பொத்தனேனி, ஸ்ரீலீலா | மம்முட்டி கிடைக்காததால் பசுபதியை நடிக்க வைத்தேன்: 'தண்டட்டி' இயக்குனர் சொல்கிறார் | பல கோடிக்கு பைக்குகள் வாங்கிய அஜித்? |
கடந்த ஆண்டு 'கிராண்ட்மா' படத்தில் நடித்த விமலா ராமன் இந்த ஆண்டு 'அஸ்வின்ஸ்' என்ற சைக்காலஜிக்கல் ஹாரர் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தில் வசந்த் ரவி நாயகனாக நடிக்கிறார். இவர்களுடன் முரளிதரன், சரஸ் மேனன், உதய தீப், சிம்ரன் பரீக் ஆகியோர் நடிக்கின்றனர். விஜய் சித்தார்த் இசையமைக்கிறார். எட்வின் சகே ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்ரீவெங்கடேஸ்வரா சினி சித்ரா சார்பில் பிரசாத் தயாரிக்கிறார்.
இந்த படத்தை ஜெர்மனில் வசிக்கும் தமிழரான தருண் தேஜா இயக்குகிறார். பல குறும்படங்களை இயக்கிய தருண் தேஜாவின் பெரும் வரவேற்பை பெற்று குறும்படமான 'அஸ்வின்ஸ்' தற்போது திரைப்படமாகிறது. 1500 ஆண்டுகளுக்கு முன்பான ஒரு ரகசியத்தை தேடிச் செல்லும் யுடியூபர்கள் அந்த ரகசியத்தின் சாபத்திற்குள் சிக்கி கொள்கிறார்கள். அதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டு வருகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை.