பாலிவுட்டின் மூத்த நடிகை காமினி கவுசல் காலமானார் | குடும்பங்கள் கொண்டாடிய படங்களின் இயக்குனர் வி சேகர் காலமானார் | கும்கி 2 படத்தை வெளியிட அனுமதி | பல ஹீரோக்கள் இதை விரும்பமாட்டார்கள் - ஆண்ட்ரியா | ராஷ்மிகாவுக்கு தேசிய விருது நிச்சயம் : தேவிஸ்ரீ பிரசாத் நம்பிக்கை | பெங்களூர் டேஸ் படத்தை ரீமேக் செய்து கெடுத்து விட்டோம் : ராணா | தமிழுக்கு வந்த காந்தாரா 2 பட வில்லன் | அஜித்தை நேரில் சந்தித்த சூரியின் நெகிழ்ச்சி பதிவு | மனைவி ஆர்த்தியின் பிறந்தநாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் | மகிழ்திருமேனியின் அடுத்த படம் குறித்து தகவல் இதோ |

'உன்னாலே உன்னாலே' படத்தின் மூலம் தமிழில் கதாநாயகனாக அறிமுகமானவர் வினய். அதன் பிறகு 'ஜெயம் கொண்டான், மோதி விளையாடு, மிரட்டல், அரண்மனை,' உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்தார். அதற்குப் பிறகு மிஷ்கின் இயக்கத்தில் விஷால் கதாநாயகனாக நடித்த 'துப்பறிவாளன்' படத்தில் வில்லனாக நடிக்க ஆரம்பித்தார். தொடர்ந்து 'டாக்டர், எதற்கும் துணிந்தவன்' ஆகிய படங்களில் வில்லனாக நடித்தார்.
பாலசந்தர் இயக்கிய கடைசி படமான 'பொய்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் விமலா ராமன். ஆஸ்திரேலியாவை பிறப்பிடமாகக் கொண்ட மலையாளப் பெண். தொடர்ந்து தமிழில் 'ராமன் தேடிய சீதை, இருட்டு' உள்ளிட்ட படங்களிலும், சில தெலுங்கு, மலையாளப் படங்களிலும் நடித்தார்.
வினய், விமலா ஆகியோர் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இருவரும் ஏற்கெனவே சில வருடங்களாக ஒன்றாக வாழ்ந்து வருவதாகவும் சொல்கிறார்கள். விமலாவுடன் அடிக்கடி வெளிநாட்டுப் பயணங்களை வினய் மேற்கொண்டுள்ளாராம். தற்போது கூட விமலாவுடன் ஆஸ்திரேலியாவில் தான் இருக்கிறார். அங்கு எடுக்கப்பட்ட சில புகைப்படங்களையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.




