இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் | விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி |
ஒரு காலத்தில் இயக்குனர்கள் அவர்களுக்கு வசதியாக இருக்கும் கதைகளைத்தான் படமாக்குவார்கள். ஆக்ஷன், காதல், காமெடி இப்படி தங்களுக்கு எது வருமோ அந்தக் கதையை எடுத்துக் கொண்டு அதில் படத்துக்குப் படம் ஏதாவது மாற்றம் செய்தோ செய்யாமலோ வெற்றி பெறுவார்கள்.
அந்த பாதுகாப்பான வழியை இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தனது மூன்றாவது படத்திலும் தொடர்ந்திருப்பது ஆச்சரியம்தான். அதுவும் விஜய் போன்ற ஒரு ஹீரோ கிடைத்தும், அவருக்காக கதை செய்யாமல் தனக்கு எது வருமோ அதைச் செய்திருக்கிறார். நெல்சனின் 'கடத்தல் கதை' என்ற பாதுகாப்பு வளையத்திற்குள் விஜய்யும் பணயக் கைதியாக 'பீஸ்ட்' படத்தில் சிக்கியிருக்கிறார் என்று பேச ஆரம்பித்துவிட்டார்கள்.
நெல்சன் தான் முதலில் இயக்கிய 'கோலமாவு கோகிலா' படத்தில் போதைப் பொருள் கடத்தல், இரண்டாவது படமான 'டாக்டர்' படத்தில் சிறுமிகள் கடத்தல் ஆகியவற்றை வைத்து கதை அமைத்திருந்தார். இப்போது விஜய் நடிக்கும் 'பீஸ்ட்' படத்தில் பிரம்மாண்ட ஷாப்பிங் மாலுக்குள் இருந்தவர்களை பணயக் கைதிகளாக கடத்தி வைத்திருப்பதை வைத்து கதை அமைத்திருக்கிறார்.
முதலிரண்டு படங்களிலும் 'கடத்தல்' சமாச்சாராம் நெல்சனை வெற்றியைக் கடக்க வைத்திருக்கிறது. அந்த ராசி 'பீஸ்ட்' படத்திலும் தொடருமா என்பதற்கு இன்னும் பத்து நாட்கள் காத்திருக்க வேண்டும்.