வெற்றி நடிக்கும் 'ஆண்மகன்' | ராயன் : தனுஷ் பாடிய ‛அடங்காத அசுரன்' பாடல் வெளியீடு | விஜயகாந்த்திற்கு பத்மபூஷண் விருது : மனைவி பிரேமலதா பெற்றார் | சல்மான்கானுக்கு ஜோடியாகும் ராஷ்மிகா மந்தனா | மேஜையை கண்டு பொறாமைப்பட்ட கமல் | பிறந்தநாளில் மதுரையில் பிரம்மாண்ட மாநாடு நடத்தும் விஜய்? | தெலுங்கில் ரீ-ரிலீஸ் ஆகும் விக்ரமின் அந்நியன் | மம்முட்டிக்கு கொடுக்கப்பட்ட எக்ஸ்ட்ரா பவர் | படம் வெளியாவதற்கு முன்பே மறைந்த சங்கீத் சிவன் | மஞ்சும்மேல் பாய்ஸ் படத்தில் சொல்லப்பட்டது உண்மையா? - விசாரிக்க தமிழக அரசு உத்தரவு |
முன்னணி மலையாள நடிகை ஸ்வேதா மேனன், கவர்ச்சியான வேடங்களில் நடிக்கும் நடுத்தர வயது நடிகை. தமிழில் சாது மிரண்டால், சந்தித்த வேளை, சினேகிதியே, அரவான், இணையதளம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். 50க்கும் மேற்பட்ட மலையாள படங்களில் நடித்துள்ள அவர் ஏராளமான ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். தற்போது தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ஸ்வேதா மேனன் ஆன்லைன் மோசடியில் 57 ஆயிரம் ரூபாயை இழந்த தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து அவர் மும்பை போலீசில் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது: நான் கணக்கு வைத்துள்ள வங்கியில் இருந்து பேசுவதாக கூறி ஒரு போன் அழைப்பு வந்தது. தொடர்ந்து அந்த போன் அழைப்பில் இருந்து எஸ்எம்எஸ் வந்தது. அந்த எஸ்எம்எஸ் லிங்கை கிளிக் செய்தவுடன், அந்த லிங்கில் கேட்கப்பட்ட ஐடி எண், பாஸ்வேர்ட் எண் மற்றும் ஓடிபி எண் ஆகியவற்றை போர்ட்டலில் டைப் செய்தேன். அடுத்த சில நிமிடங்களில் எனது வங்கிக் கணக்கில் இருந்து ரூ.57,636 எடுக்கப்பட்டது. ஆனால், உண்மையில் வங்கியில் இருந்து எனக்கு போன் அழைப்பு வரவில்லை என்பதை பின்னர்தான் அறிந்து கொண்டேன். ஆன்லைன் பணமோசடியில் ஈடுபட்ட நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று தெரிவித்துள்ளார். இவ்விவகாரம் குறித்து மும்பை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.