இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை | 'பயர்' 50வது நாள் : சவாலான படங்களை தயாரித்து, இயக்க ஜே சதீஷ் குமார் முடிவு | ரத்தத்தால் அடா சர்மாவின் ஓவியம் வரைந்த ரசிகர் | விவாகரத்து பெற்றுவிட்டேன் : வெளிப்படையாக அறிவித்த மம்முட்டி பட பெண் இயக்குனர் | லூசிபர் 3ம் பாகத்தின் டைட்டில் இதுதான் : இசையமைப்பாளர் சூசக தகவல் |
மலையாள திரையுலகில் சமீப நாட்களாக குறைந்த பட்ஜெட்டில் படம் எடுத்து 50 முதல் 100 கோடிகளை அசால்ட்டாக அள்ளி வருகிறார்கள். அதுமட்டுமல்ல அந்த படத்தின் இயக்குனர்களுக்கு அடுத்து மிகப்பெரிய ஹீரோக்களின் படங்களை இயக்கும் வாய்ப்பும் தானாக தேடி வருகிறது. அந்த வகையில் கடந்த பிப்ரவரி 3ஆம் தேதி வெளியான ரோமாஞ்சம் என்கிற திரைப்படம் ஐந்து கோடி பட்ஜெட்டில் உருவாகி இப்போது வரை 50 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது. இந்த படத்தை இயக்குனர் ஜித்து மாதவன் என்பவர் இயக்கியுள்ளார். பெரிய அளவில் பிரபலமில்லாத நடிகர்களை வைத்து ஹாரர் கலந்த காமெடி படமாக இந்த படத்தை உருவாக்கி ஹிட் ஆக்கியுள்ளார்.
இதைத் தொடர்ந்து இவருக்கு அடுத்ததாக நடிகர் பஹத் பாஸில் நடிக்கும் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த படம் மார்ச் மாதமே துவங்கப்பட்டு வரும் ஓணம் பண்டிகை ரிலீஸாக வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.
இதே போல கடந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ஜெய ஜெய ஜெய ஹே என்கிற படமும் இதே பாணியில் 50 கோடிக்கு மேல் வசூலித்து சூப்பர் ஹிட் ஆனது. தற்போது அந்த படத்தின் இயக்குனர் விபின் தாஸ் மீண்டும் அதே ஹீரோவை வைத்து இயக்கும் புதிய படத்தில் நடிகர் பிரித்விராஜ் தானே முன்வந்து வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்புக் கொண்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.