'கற்றது தமிழ்', 'தங்க மீன்கள்', 'தரமணி', 'பேரன்பு' போன்ற படங்களை இயக்கிய இயக்குனர் ராம், அடுத்ததாக நிவின் பாலியை வைத்து ‛ஏழு கடல் ஏழு மலை' என்ற படத்தை இயக்கி வருகிறார். நடிகை அஞ்சலி கதாநாயகியாக நடித்துள்ளார். சூரி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படத்தை 'வி ஹவுஸ் ப்ரொடக்சஷன்' சார்பாக சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்சன் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ராம் இயக்கும் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் ‛தமிழ்ப்படம், சென்னை-28' படங்களில் நடித்தசிவா கதாநாயகனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. பிரபல ஓடிடி நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் படப்பிடிப்பு அடுத்த மாத துவக்கத்தில் அல்லது மத்தியில் துவங்கவுள்ளதாகத் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.