நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

மலையாளத்தில் பிருத்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள காபா என்கிற திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது. இந்த படத்தை பிரபல இயக்குனர் ஷாஜி கைலாஷ் இயக்கியுள்ளார். கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். மலையாள திரைப்பட இயக்குனர்கள் சங்கத்திற்கு நிதி திரட்டும் விதமாக இந்த படம் உருவாகி உள்ளது. இந்தப் படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்க இருந்தவர் மஞ்சுவாரியர் தான். அவரை மனதில் வைத்துதான் நாயகி கதாபாத்திரம் எழுதப்பட்டது. ஆனால் சில காரணங்களால் அவரால் இந்தப் படத்தில் நடிக்க இயலாமல் போனது.
அதைத் தொடர்ந்து அபர்ணா பாலமுரளி இந்த படத்தில் கதாநாயகியாக நுழைந்தார். சமீபத்தில் நடைபெற்ற இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் நாயகி அபர்ணா பாலமுரளி பேசும்போது, “நான் ஒரு ரசிகையாக மாறிய தருணம் இது. சில காரணங்களால் மஞ்சு சேச்சி இந்த கதாபாத்திரத்தில் நடிக்க முடியாமல் போனது. ஆனால் நான் இந்த கதாபாத்திரத்தில் நடித்து இருப்பதை மகிழ்ச்சியாகவும் அதேசமயம் பெருமையாகவும் உணர்கிறேன்” என்று கூறினார்.