ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
வெங்கி அட்லூரி இயக்கத்தில், துல்கர் சல்மான், மீனாட்சி சவுத்ரி மற்றும் பலர் நடிப்பில் கடந்த வருடம் வெளிவந்த படம் 'லக்கி பாஸ்கர்'. தெலுங்கில் தயாராகி மற்ற மொழிகளில் டப்பிங் ஆகி வெளியான படம். தமிழிலும் குறிப்பிடத்தக்க வசூலைப் பெற்றது.
ஓடிடியில் வெளியான பின்பு இப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. வங்கி மற்றும் பங்குச்சந்தை மோசடியை மையமாக வைத்து எடுக்கப்பட்டதால் பலரும் இப்படத்தை விரும்பிப் பார்த்தார்கள். எப்படியெல்லாம் மோசடி செய்கிறார்கள் என்பது ரசிகர்களுக்குப் புதிதாக இருந்தது.
நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியான இந்தப் படம் கடந்த 13 வாரங்களாக தொடர்ந்து டிரெண்டிங்கில் உள்ளது. வேறு எந்த ஒரு தென்னிந்தியப் படமும் இப்படி ஒரு சாதனையைப் படைத்ததில்லை.