Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ஆந்திர முதல்வரை சந்திக்கும் விஷால்!

22 டிச, 2022 - 16:43 IST
எழுத்தின் அளவு:
Vishal-will-meet-the-Chief-Minister-of-Andhra-Pradesh!

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற நடிகர் விஷால் அதன்பிறகு சென்னையில் உள்ள ஆர்.கே. நகரில் நடை நடைபெற்ற இடைத்தேர்தலில் சுயேச்சையாக போட்டியிடுவதற்கு மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால் அவரது மனுவில் தவறு உள்ளதாக கூறி அதை தேர்தல் அதிகாரிகள் ஏற்க மறுத்தார்கள்.

அதன் பிறகு ஆந்திரா மாநிலத்தில் உள்ள குப்பம் தொகுதியில் அங்குள்ள முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக விஷால் தேர்தலில் போட்டியிடப்போவதாக சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது. ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து ஒரு செய்தி வெளியிட்டார் விஷால். அதோடு திரைப்படங்களில் நடிப்பதில் மட்டுமே தனது கவனம் இருப்பதாகவும் அப்போது குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் தற்போது ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தன்னை சந்திக்க வருமாறு விஷாலுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார். அவர்களின் சந்திப்பு டிசம்பர் 27ம் தேதி நடைபெறுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை அடுத்து 2024 தேர்தலில் ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் சார்பில் ஆந்திர மாநிலத்தில் உள்ள சித்தூரில் விஷால் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக சோசியல் மீடியாக்களில் செய்திகள் வெளியாகி உள்ளன.

மேலும் தற்போது ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியின் அமைச்சரவையில் நடிகை ரோஜா அமைச்சராக அங்கம் வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மஞ்சு வாரியரின் கதாபாத்திரம் எனக்கு கிடைத்தது அதிர்ஷ்டம் ; அபர்ணா பாலமுரளிமஞ்சு வாரியரின் கதாபாத்திரம் எனக்கு ... ஆஸ்கார் பட்டியலில் இடம் பிடித்த காந்தாரா, செல்லோ ஷோ, ஆர்.ஆர்.ஆர்! ஆஸ்கார் பட்டியலில் இடம் பிடித்த ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

Easwar Kamal - New York,யூ.எஸ்.ஏ
22 டிச, 2022 - 18:26 Report Abuse
Easwar Kamal நல்லது. அப்படியே ஆந்திர பக்கம் போயிரு. உன் நடிப்பும் பேச்சும் சகிகலை. எப்படியும் தொக்கப்போற தோத்துபோனதன் இவனுக்கு எல்லாம் எந்த நிலைமையில் இருக்கிறோம்னு புரியும். கண்டிப்பா ஜெகன் அடுத்த முறை வர வாய்ப்பு ரொம்ப கமி.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in