பிளாஷ்பேக் : விசு இயக்கிய கமர்சியல் ஆக்சன் படம் | ஜுன் 5, 6ல் 4 படங்கள் ரிலீஸ் | கன்னட, தமிழ் விவகாரம் : கமல் மன்னிப்பு கேட்டால் என்ன...? : 2:30 மணி வரை கெடு விதித்த கர்நாடகா ஐகோர்ட் | சினிமாவில் பிஸி, அதேசமயம்... கார்த்தியின் மறுபக்கம் | ஜூலை 11ல் அனுஷ்காவின் 'காதி' ரிலீஸ் | இளையராஜாவை வாழ்த்தாத சினிமா பிரபலங்கள் | பந்தா இல்லாத நாகர்ஜூனா | விக்ரம் சுகுமாரனின் மறைவுக்கு அதிக வேலைப்பளு காரணமா? : நடிகை விஜி சந்திரசேகர் வேதனை | நூறு ஸ்ரேயா கோஷல்களை தூக்கி சாப்பிட்டு விடுவார் : பாடகி 'தீ' குறித்து சின்மயி புகழாரம் | பஹத் பாசில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துவதில்லை: நடிகர் வெளியிட்ட ஆச்சரிய தகவல் |
தமிழில் நெஞ்சிருக்கும் வரை, உன்னை போல் ஒருவன், பயணம், வெடி உள்பட பல படங்களில் நடித்தவர் தெலுங்கு நடிகை பூனம் கவுர். தற்போது நண்டு என் நண்பன், கெஸ்ட் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் பைப்ரோமியால்ஜியா என்ற ஒரு அரிய வகை நோயால் அவர் பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தசை வலியுடன் கூடிய உடல் சோர்வு தூக்கமின்மை, மனநிலை மாற்றம் போன்ற பிரச்சனைகள் இந்த நோயின் பாதிப்புகள் என்றும் கூறப்படுகிறது. ஆரம்பத்தில் இந்த நோயினால் மிகப்பெரிய அளவில் பாதிக்கப்பட்டு இருந்த போதும் தற்போது இந்த நோயுடன் தான் வாழ பழகி கொண்டதாகவும் தெலுங்கு சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது.
இந்த நோய் பற்றி பூனம் கவுர் இன்ஸ்டாவில், ‛‛பைப்ரோமியால்ஜியாவால் பல திட்டங்களைக் கொண்ட ஒரு உந்துதல் பெற்ற நபர் எதையும் செய்ய முடியாமல் ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுவார்'' என பதிவிட்டுள்ளார்.
இதையடுத்து பலரும் அவர் விரைந்து குணமாக வேண்டுவதாக கருத்து பதிவிட்டுள்ளனர். ஏற்கனவே நடிகை சமந்தா மயொசிடிஸ் எனும் அரிய வகை தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரை தொடர்ந்து தற்போது பூனம் கவுரும் இப்படி ஒரு நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.