குட் பேட் அக்லி டிரைலர் எப்போது? | பழம்பெரும் ஹிந்தி நடிகர் மனோஜ் குமார் காலமானார் | ஏப்ரல் முதல் வாரம் முழுவதும் நெட்பிளிக்ஸ் ஆதிக்கம் | ரூ.52 கோடி வசூலுடன் வலம் வரும் வீர தீர சூரன் | 'இட்லி கடை' புதிய வெளியீட்டுத் தேதி எப்போது? | 'குட் பேட் அக்லி' முன்பதிவு இன்று முதல் ஆரம்பம் | பாட்டு பாடி, பழைய நினைவுகளை பகிர்ந்து பாரதிராஜாவை தேற்றிய கங்கை அமரன் | பெண் குழந்தைக்கு தந்தையான ரெடின் கிங்ஸ்லி | துருவ நட்சத்திரம் : காத்திருக்கும் விக்ரம் | 25 வயதில் மகன் இருக்கையில் தந்தையாக நடிக்க தயங்கும் ஹீரோக்கள் : சசிகுமார் ஆதங்கம் |
நடிகர் கருணாசின் மகன் கென் கருணாஸ், சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். கடைசியாக அசுரன் படத்தில் தனுசின் மகனாக நடித்தார். இந்த நிலையில் சல்லியர்கள் என்ற படத்தின் மூலம் இசை அமைப்பாளராகி இருக்கிறார். இதில் அவர் தனது நண்பர் ஈஸ்வர் என்பவருடன் இணைந்து இசை அமைத்திருக்கிறார். இந்த படத்தை கருணாஸ் தயாரித்து அவரும் நடித்திருக்கிறார். சத்யா தேவி என்ற புதுமுகம் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.
இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கருணாசின் மகன் கென் பேசியதாவது: என்னுடைய நண்பன் ஈஸ்வர் தான் இந்த படத்திற்கு மெயின் இசையமைப்பாளர். நான் அவருக்கு பக்கபலமாக இருந்து பணியாற்றியுள்ளேன். இந்த சல்லியர்கள் படம் பற்றி சொன்னபோது ஆரம்பத்தில் எதுவும் புரியவில்லை. ஒருவேளை தலைமுறை இடைவெளி காரணமாக இருக்கலாம். இதைப்பற்றி புரிந்து கொள்ளவே எங்களுக்கு ஒரு மாதம் ஆகிவிட்டது. உண்மையை சொல்லப்போனால் இயக்குனர் கிட்டுவுடன் வேலை பார்ப்பது ரொம்பவே கஷ்டம். ஆனால் அதன்பிறகு கதையை உள்வாங்கி இசையமைக்கத் துவங்கினோம். என்றார்.
இதே விழாவில் கருணாஸ் பேசியதாவது: இந்த படத்தில் எனது மகனின் நண்பர் ஈஸ்வரை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்துகிறேன். என் மகனும் அவனுடன் இணைந்து இசையமைப்பு பணிபுரிந்துள்ளார் என்றாலும் அவர் ஒரு நல்ல நடிகனாக வரவேண்டும் என்று தான் நான் ஆசைப்படுகிறேன். ஆனால் இனிவரும் நாட்களில் எல்லாவிதமான தகுதிகளையும் வளர்த்துக் கொண்டால் எதிர்காலத்திற்கு நல்லதாக இருக்கும். என்றார்.