Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

உடல்நிலை பற்றி கண்ணீருடன் பேட்டியளித்துள்ள சமந்தா

08 நவ, 2022 - 12:18 IST
எழுத்தின் அளவு:
Samantha-tears-about-her-health-issue

நடிகை சமந்தா தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார். அதற்கான சிகிச்சையில் இருப்பதாகவும் விரைவில் முழுவதும் குணமடைவேன் என்றும் கூறியிருந்தார். சமந்தா நடித்துள்ள 'யசோதா' படம் தமிழ், தெலுங்கில் இந்த வாரம் நவம்பர் 11ம் தேதி வெளியாக உள்ளது. வெளியில் சென்று இப்படத்திற்காக புரமோஷன் செய்ய முடியாது என்பதால் தமிழ், தெலுங்கில் படத் தயாரிப்பு நிறுவனமே சமந்தாவின் பேட்டி ஒன்றை எடுத்து அதை யு டியூபில் வெளியிட்டுள்ளது.

தெலுங்கு பேட்டியில் தன்னுடைய உடல்நிலை குறித்து கண்ணீருடன் பேட்டி அளித்துள்ளார் சமந்தா. “இன்ஸ்டாகிராமில் நான் சொன்னபடி சில தினங்கள் நல்ல நாட்களாகவும், சில நாட்கள் மோசமான நாட்களாகவும் இருக்கிறது. சில நாட்களில் ஒரு அடி நடப்பது கூட எனக்கு சிரமமாக இருந்தது. ஆனால், திரும்பிப் பார்க்கும் போது நான் பல விஷயங்களைக் கடந்து இவ்வளவு தூரம் வந்திருக்கிறேன் என ஆச்சரியமாகப் பார்ப்பேன். நான் இங்கு போராடவே இருக்கிறேன்.

நான் ஒரு விஷயத்தை மட்டும் தெளிவாக சொல்ல விரும்புகிறேன். எனது உடல் நிலை உயிருக்கே ஆபத்தாக உள்ளதாக சில செய்திகளைப் பார்த்தேன். ஆனால், நான் அப்படியான நிலையில் இல்லை. இந்த கணம் வரையிலும் நான் சாகாமல்தான் இருக்கிறேன். அந்தத் தலைப்புச் செய்திகள் அவசியமானவை என நான் நினைக்கவில்லை. மிகவும் கஷ்டமான நிலையில்தான் இருக்கிறேன், ஆனால், அதை எதிர்த்துப் போராடுவேன்,” என மிகவும் எமோஷனலாக கண்ணீருடன் பேசியிருக்கிறார்.

சமந்தாவின் பேட்டியை காண : https://www.youtube.com/watch?v=WTGvcFsWbb4

Advertisement
கருத்துகள் (3) கருத்தைப் பதிவு செய்ய
அடுத்தடுத்து 'பார்ட்டிகள்' : களை கட்டிய தமிழ் சினிமாஅடுத்தடுத்து 'பார்ட்டிகள்' : களை ... ‛ரஞ்சிதமே' ஆன 'மொச்ச கொட்ட பல்லழகி' : காப்பி அடிக்கப்பட்டதா விஜய்யின் வாரிசு பாடல்? ‛ரஞ்சிதமே' ஆன 'மொச்ச கொட்ட ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (3)

P SIVASAKTHI NAYAGAN - UDUMALPET,இந்தியா
09 நவ, 2022 - 05:57 Report Abuse
P SIVASAKTHI NAYAGAN ஆங்கில மருத்துவத்தில் மருந்து இல்லை. குணமாக்க முடியாது என்று தெரிந்தே மிகப்பெரிய காசைப் பிடிங்கிவிட்டு உடல்நிலை மோசமானவுடன் பல வருடங்கள் கழித்து கைவிட்டு விடுவார்கள். சித்தா, ஆயுர்வேதா மருத்துவ முறையில் சிகிச்சை பெற்றால் கண்டிப்பாக இதற்கு மேல் பெரிய பாதிப்பு வராமல் தடுக்கலாம்.
Rate this:
Krishna -  ( Posted via: Dinamalar Android App )
09 நவ, 2022 - 03:14 Report Abuse
Krishna Life is uncertain. Feeling sad for her. With the fame she has garnered thus far is not going to help to come out of this problem at least for now
Rate this:
raja - madurai,இந்தியா
08 நவ, 2022 - 21:39 Report Abuse
raja don't worry, soon all your pains will go as fog. with gods grace you will be alright very soon. do remember, nothing is permanent in this world, including your problems also. praying to god for your quick recovery.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in