இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் | விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி |
நாவல் படிக்கும் ஆர்வலர்கள் அனைவரும் தவறாமல் படித்த, படிக்கும் சரித்திர நாவலாக 'பொன்னியின் செல்வன்' இன்றும் இருக்கிறது. பலர் திரைப்படமாக எடுக்க முயற்சித்து நின்று போனதை இயக்குனர் மணிரத்னம் இரண்டு பாகங்களாக எடுத்து முடித்திருக்கிறார்.
செப்டம்பர் 30ம் தேதி இப்படத்தின் முதல் பாகம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முதல் திடீரென கதாபாத்திரங்களை அறிமுகம் செய்து அதன் போஸ்டர்களை வெளியிட்டு வருகிறார்கள். நேற்று ஆதித்த கரிகாலன் கதாபாத்திரத்தில் நடிக்கும் விக்ரம் போஸ்டர் வெளியிடப்பட்டது. இன்று வந்தியத் தேவன் கதாபாத்திரத்தில் நடிக்கும் கார்த்தி போஸ்டர் வெளியிடப்பட்டது. இரண்டு போஸ்டர்களுக்கும் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது.
தினமும் ஒரு அறிமுகம் என்ற வரிசையில் நாளை அருள்மொழி வர்மன் ஆக நடிக்கும் ஜெயம் ரவி போஸ்டரும், அதற்கு மறுநாள் குந்தவை கதாபாத்திரத்தில் நடிக்கும் த்ரிஷா போஸ்டரும், அதற்கடுத்த நாள் நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்கும் ஐஸ்வர்யா ராய் போஸ்டரும் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் பல முக்கிய கதாபாத்திரங்களில் பல நடிகர்கள், நடிகைகள் நடித்துள்ளார்கள். அவர்களது அறிமுகப் போஸ்டர்களும் அடுத்தடுத்து வெளியாக வாய்ப்புள்ளது. படம் பார்ப்பதற்கு முன்பு அந்தந்தக் கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகர்கள், நடிகைகளை மனதில் பதிய வைத்துக் கொண்டால் தான் படம் பார்க்கும் போது ஒன்றிப் பார்க்க முடியும்.
இந்த வாரக் கடைசியில் அல்லது அடுத்த வாரத் துவக்கத்தில் படத்தின் டீசர் வெளியாகும் எனத் தெரிகிறது.