Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

சுந்தர்.சி படப்பிடிப்பில் ஒரே நாளில் 2 முறை கேக் வெட்டிய பாகுபலி பிரபாகர்

03 ஜூலை, 2022 - 12:28 IST
எழுத்தின் அளவு:
Baahubali-Prabhakar-cut-the-cake-2-times-in-a-day-while-shooting-Sundar.C

கடந்த 2006ல் சுந்தர் சி நடிப்பில் வெளியான படம் தலைநகரம். இந்த படத்தில் முதன்முறையாக கதாநாயகனாகவும் மாறினார் சுந்தர்.சி. சுராஜ் இயக்கிய இந்தப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. இந்த நிலையில் 16 வருடங்கள் கழித்து இந்த படத்தின் இரண்டாம் பாகம் தலைநகரம் 2 என்கிற பெயரில் உருவாகி வருகிறது. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் ஈசிஆர் மற்றும் வளசரவாக்கம் ஆகிய பகுதிகளில் மாறி மாறி நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் கதாநாயகியாக லாலக் பால்வணி நடிக்க, முக்கிய வேடங்களில் தம்பி ராமையா மற்றும் பாகுபலி புகழ் காளகேயா பிரபாகர் நடித்து வருகின்றனர். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பில் பிரபாகரின் பிறந்தநாளை படக்குழுவினர் கேக் வெட்டி கொண்டாடினர். இதில் என்ன ஆச்சரியம் என்றால் அதே நாளில் கொஞ்ச நேரம் கழித்து இந்தப்படத்தில் பிரபாகர் கதாபாத்திரம் கேக் வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடுவது போன்று ஒரு காட்சியும் இருந்ததால் மீண்டும் படத்திற்காக ஒருமுறை கேக் வெட்டி அவர் பிறந்தநாளை கொண்டாடிய காட்சிகள் படமாக்கப்பட்டனவாம்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
பூஜையுடன் தொடங்கிய நடிகர் விதார்த் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்புபூஜையுடன் தொடங்கிய நடிகர் விதார்த் ... என் காஷ்மீர் கனவை நனவாக்கிய சீதாராமம் ; மகிழ்ச்சியில் துல்கர் சல்மான் என் காஷ்மீர் கனவை நனவாக்கிய ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)