Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

மகேஷ்பாபுவுடன் நடித்த மகிழ்ச்சியில் சைத்ரா ரெட்டி

09 ஜூன், 2022 - 13:13 IST
எழுத்தின் அளவு:
Chaitrareddy-happy-acting-with-Maheshbabu

சின்னத்திரை நடிகையான சைத்ரா ரெட்டியின் புகழ் தற்போது மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பான 'கல்யாணம் முதல் காதல் வரை' என்ற தொடரில் ரீப்ளேஸ்மெண்ட் ஹீரோயினாக அறிமுகமான சைத்ரா ரெட்டி, தொடர்ந்து சமீபத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பான 'யாரடி நீ மோகினி' தொடரில் வில்லியாக நடித்ததன் மூலம் சின்னத்திரை ரசிகர்களை கவர்ந்தார். தற்போது 'கயல்' தொடரில் கலக்கி வரும் சைத்ரா, சினிமா வட்டாரங்களில் மிகவும் பிரபலமாகிவிட்டார். அதற்கு காரணம் அஜித் நடித்த வலிமை படத்தில் சைத்ரா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதன் காரணமாக அவரது புகழ் தமிழ் ரசிகர்கள் மத்தியில் அதிகமானது. தற்போது அவர் தெலுங்கு நடிகரான மகேஷ் பாபுவுடனும் கமர்ஷியல் விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார். அதன் ஷூட்டிங் ஸ்பாட் போட்டோக்களை பகிர்ந்து, தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். அவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். விரைவில் சைத்ரா சினிமாவில் ஹீரோயினாக நடிப்பார் என்றும் எதிர்பார்த்து வருகின்றனர்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
மதம் மாறிய திருமணம் - குஷ்பு, ஜோதிகா வரிசையில் நயன்தாராமதம் மாறிய திருமணம் - குஷ்பு, ஜோதிகா ... சினிமாவில் ஜெயிக்க இன்னும் போராடிக் கொண்டிருக்கிறேன்: அருண் விஜய் சினிமாவில் ஜெயிக்க இன்னும் போராடிக் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

ongole madu - ongole,இந்தியா
15 ஜூன், 2022 - 08:33 Report Abuse
ongole madu ரெட்டி என்பது ஜாதி பெயர் அல்லவே? ஜாதிகளை ஒழிக்கும் ஆட்சியில் ஓங்கோல் பக்கமிருந்து ஒரு ஜாதி சத்தம்
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in