புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
1986 ஆம் ஆண்டு மாட்டுக்கார மன்னாரு என்ற படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் தேவா. அதன் பிறகு மனசுக்கேத்த மகாராசா, வைகாசி பொறந்தாச்சு, நம்ம ஊரு பூவாத்தா என்று அடுத்தடுத்து ஹிட் படங்களுக்கு இசையமைத்தார். குறிப்பாக ரஜினி நடிப்பில் அண்ணாமலை, பாட்ஷா போன்ற படங்களுக்கு சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தவர் தேவா. அதேபோன்று கமல், விஜயகாந்த், சத்யராஜ், விஜய், அஜித் என அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களுக்கும் இசையமைத்திருக்கும் தேவா, இதுவரை தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்பட 400 படங்களுக்கு மேல் மேல் இசையமைத்து இருக்கிறார்.
சமீபகாலமாக அனிருத் போன்ற இளவட்ட இசையமைப்பாளர்களின் இசையில் பின்னணியும் பாடி வருகிறார். அதோடு தேவாவின் மகன் ஸ்ரீகாந்த் தேவாவும் திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில் நேற்று இசையமைப்பார் தேவா தன்னுடைய 73 வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியிருக்கிறார். அவரது இந்த பிறந்தநாள் நிகழ்ச்சியில் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டு அவரை வாழ்த்தி இருக்கிறார்கள்.