'ஆரோமலே' படத்திற்கு எதிராக வழக்கு | பிளாஷ்பேக்: நடிகையின் பிரச்னையை பேசிய முதல் படம் | தமிழில் 4 ஆண்டுக்கு பின் நாயகியாக நடிக்கும் கல்யாணி பிரியதர்ஷன் | எனக்கு பாராட்டு விழா வேணாம்: தயாரிப்பாளர் தாணு | வீட்டை வைத்து கடன் வாங்கி படம் தயாரித்ததுஏன்? ஆண்ட்ரியா | 'வாழு, வாழ விடுங்கள்': கிண்டல், கேலிகளுக்கு கீர்த்தி சுரேஷ் பதில் | அஜித் அடுத்த பட அறிவிப்பு - தொடரும் தாமதம் | மீண்டும் தெலுங்கு இயக்குனர் படத்தில் சூர்யா ? | 'மாஸ்க்': வாய்ப்பில்லாத ஆண்ட்ரியாவுக்கு வாய்ப்புகள் வருமா? | 50 வருட திரையுலக பயணத்தில் இருந்து ஓய்வு பெறும் நடிகை துளசி |

நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு கமல் நடிப்பில் திரைக்கு வந்துள்ள படம் விக்ரம். கமலுடன் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன் என பலர் நடித்திருக்கும் இந்தப்படம் திரையிடப்பட்ட அனைத்து சென்டர்களிலும் மிகப்பெரிய அளவில் வசூல் செய்து வருவதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. 5 ஆயிரம் தியேட்டர்களில் திரையிடப்பட்டுள்ள இந்த படம் தமிழகத்தில் மட்டும் 800 தியேட்டர்களில் வெளியாகியுள்ளது. அந்த வகையில் விக்ரம் படம் முதல்நாளில் 34 கோடி வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இது, இதுவரை கமல் நடித்து வெளியான படங்களின் முதல் நாள் வசூலில் அதிக தொகை ஆகும். அதோடு, ரஜினி நடித்து வெளியான அண்ணாத்த படம் சென்னையில் முதல் நாளில் 1.71 கோடி வசூல் செய்திருந்தது. அதையடுத்து அஜித்தின் வலிமை 1.82 கோடி வசூலித்தது. விஜய் நடித்து வெளியான பீஸ்ட் 1.96 கோடி வசூலித்த நிலையில் தற்போது கமலின் விக்ரம் படமும் ரஜினியின் அண்ணாத்தை படத்தைப் போலவே சென்னையில் முதல் நாளில் 1. 71 கோடி வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.