‛ஜமா' இயக்குனரின் அடுத்த பட தலைப்பு ‛அன்பே டயானா' | எழுத்தாளரை மணந்தார் பாடகர் வேடன் | மீண்டும் நடிக்க வரும் ரம்பா | பிரியங்கா சோப்ராவின் தி பிளப் ஓடிடியில் வெளியானது | விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகாவுக்கு திருமண வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி | மார்ச் 6ல் ‛ஓ பட்டர்பிளை' ரிலீஸ் | ஜி.வி.பிரகாஷின் புதிய படங்கள் குறித்து தகவல் இதோ | பிளாஷ்பேக்: ஒரே படக்கதை; வெற்றியை சுவைத்த எம் கே ராதா... வீழ்ச்சியைக் கண்ட எம் ஜி ஆர் | ஆர்யா படத்தில் நடிக்கமாட்டேன்: அபர்ணதி சொன்னது ஏன்? | ஓடிடியிலும் வரவேற்பு பெற்ற ஆட்டோகிராப் : சேரன் மகிழ்ச்சி |

அண்ணாத்த படத்தை அடுத்து நெல்சன் இயக்கும் தனது 169வது படத்தில் நடிப்பதற்கு தயாராகி கொண்டிருக்கிறார் ரஜினிகாந்த். அதேப்போல் எச்.வினோத் இயக்கிய வலிமை படத்தை அடுத்து தற்போது மீண்டும் அவரது இயக்கத்தில் தனது 61ஆவது படத்தில் நடித்து வருகிறார் அஜித் குமார். அவருக்கு ஜோடியாக மஞ்சுவாரியர் நடிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நடிகர் ரஜினியை அவரது வீட்டிற்கு சென்று அஜித் குமார் சந்தித்ததாக ஒரு புகைப்படம் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஆனால் அந்தப் புகைப்படத்தை பார்க்கையில் ரஜினியும் அஜித்தும் நேரில் சந்தித்துக்கொண்ட புகைப்படமாக தெரியவில்லை. தனித்தனியே அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை மார்பிங் முறையில் இணைத்து வெளியிட்டது போல் தெரிகிறது. இதனால் நெட்டிசன்கள் மிகுந்த குழப்பத்துக்கு உள்ளாகி வருகிறார்கள்.