காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் |
பொதுவாக முன்னணி கதாநாயகிகளை பொறுத்தவரை சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பதுடன் அவ்வப்போது ரசிகர்களுடன் கலந்துரையாடல் நடத்தி அவர்களது கேள்விகளுக்கும் பதில் அளித்து அவர்களுடனான நெருக்கத்தையும் நட்பையும் தக்கவைத்து வருகிறார்கள்.. ஆனால் நாகரிகம் தெரியாத ஒரு சில ஆசாமிகள் நடிகைகள் தானே என்கிற நினைப்பில் அநாகரிகமான கேள்விகளை கேட்டு நடிகைகளுக்கு சங்கடத்தையும் மற்ற ரசிகர்களிடம் முகச்சுளிப்பையும் ஏற்படுத்துகின்றனர்.
அப்படித்தான் சமீபத்தில் நடிகை பிரியா பவானி சங்கரிடம் ஒரு நபர் உங்களது உள்ளாடை சைஸ் என்ன என கேட்டுள்ளார். ஆனால் அதற்கு சற்றும் தயங்காமல் அந்த அளவை கூறியதுடன், மார்பகங்களை நான் வேற்றுக்கிரகத்தில் இருந்து வாங்கி வரவில்லை சகோதரரே.. உங்கள் வாழ்க்கையில் உள்ள பெண்களிடத்த்திலும் அவை இருக்கின்றன.. நீங்கள் அங்கே உற்று நோக்கி பார்த்தாலும் தெரியும் என பதிலடி கொடுத்திருந்தார்.
இந்தநிலையில் நடிகை ஸ்ருதிஹாசன் இதேபோன்று சோஷியல் மீடியாவில் ரசிகர்களிடம் கலந்துரையாடியபோது, ஒரு நபர் உங்களது லிப் சைஸ் என்ன என்று கேட்டுள்ளார். அதற்கு, அப்படி லிப் சைஸ் என ஒன்று இருக்கிறதா என கேட்ட ஸ்ருதிஹாசன், உடனே ஒரு செல்பி எடுத்து பதிவிட்டு, இதை வைத்து அளந்து கொள்ளுங்கள் என மென்மையான முறையில் பதிலடி கொடுத்துள்ளார்..
இதுபோன்று கேள்வி கேட்கும் நபர்களுக்கு இப்படி கேட்பதால் என்ன சந்தோசம் கிடைக்கிறதோ, இவர்கள் எல்லாம் எப்போது திருந்துவார்களோ தெரியவில்லை.