செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
'பீஸ்ட், கேஜிஎப் 2' இரண்டு படங்களின் வெளியீட்டிற்கும் முன்பும் 'பீஸ்ட்' படத்திற்குப் போட்டியாக 'கேஜிஎப் 2' படமா என்ற ஒரு சர்ச்சை எழுந்தது. ஆனால், வெளியீட்டிற்குப் பிறகு 'கேஜிஎப் 2' படத்தை 'பீஸ்ட்' நெருங்கவே முடியாது என்பதுதான் உண்மையாகிப் போனது.
'பீஸ்ட்' படம் முதலில் வந்ததால் அந்தப் படம் பற்றிய பேச்சு ஒரு நாள் இருந்தது. ஆனால், மறுதினமே 'கேஜிஎப் 2' படம் வந்தது. அதன் பிறகு 'கேஜிஎப் 2' படம் பற்றிய பேச்சுத்தான் அதிகமாக இருக்கிறது. சமூக வலைத்தளங்களில் 'கேஜிஎப் 2' படத்தை ரசிகர்கள் கொண்டாடுகிறார்கள்.
இந்தியத் திரையுலகத்தில் ஆக்ஷன் படங்களுக்கென்று ஒரு 'டார்கெட்'ஐ படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் 'பிக்ஸ்' செய்துவிட்டார். இனி, அந்த அளவிற்கு அடுத்து வருபவர்கள் ஆக்ஷன் படமெடுத்தாக வேண்டிய கட்டாயம் வந்துவிட்டது.
'கேஜிஎப் 2' படத்திற்குக் கிடைத்துள்ள வரவேற்பு காரணமாக படம் வெளிவந்த இரண்டு நாட்களுக்குப் பின்னும் பல தியேட்டர்களில் அதிகாலை, காலை சிறப்புக் காட்சிகள் நாளை வரை திட்டமிடப்பட்டுள்ளன. இன்றே சில தியேட்டர்களில் நடு இரவு 1.30 மணிக் காட்சிகள் ஹவுஸ்புல்லாக நடைபெற்றுள்ளது. இந்தப் படத்திற்கு மக்களின் வருகை அதிகமாக இருப்பதால் அனைத்து வரவேற்பையும் பணமாக்க வேண்டும் என்பதால் பல தியேட்டர்கள் சிறப்புக் காட்சிகளை நடத்துகின்றன.
இதனால் 'பீஸ்ட்' படம் ரெகுலர் காட்சிகள் மட்டுமே நடைபெறுகிறது. திங்கள் கிழமை முதல் பெரும்பாலான தியேட்டர்களில் அதன் காட்சிகள் குறைக்கப்படும் என்றும் சொல்கிறார்கள். அதற்குப் பதிலாக 'கேஜிஎப் 2' படத்தைத் திரையிட தியேட்டர்காரர்கள் முடிவு செய்துள்ளார்களாம். பல தியேட்டர்காரர்களும் அவர்களது சமூக வலைத்தளங்களில் 'பீஸ்ட்'ஐ கைவிட்டு, 'கேஜிஎப் 2' படத்தைப் பற்றிய தொடர்ந்து பதிவிட்டு வருவதையும் பார்க்க முடிகிறது.