‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் | தீபாவளி ரேசில் இன்னொரு படம் : ஆனாலும், ரசிகர்கள் பாடு திண்டாட்டம் | சிறு பட்ஜெட் படத்திற்காக சம்பளம் குறைத்து வாங்கிய கவிஞர் நா.முத்துகுமார் | 2025ல் தமிழ் சினிமா: இப்படியே போய்விடுமா ??? | இந்த வாரமும் இத்தனை படங்கள் வெளியீடா... தாங்குமா...? | தமனின் கிரிக்கெட்டைப் பாராட்டிய சச்சின் டெண்டுல்கர் | 300 கோடியைக் கடந்த 3வது படம் 'ஓஜி' | பழம்பெரும் பாலிவுட் நடிகை சந்தியா சாந்தாராம் காலமானார் | ரஜினி திடீர் இமயமலை பயணம் : பத்ரிநாத் கோயிலில் சாமி தரிசனம் |
விஜய், பூஜா ஹெக்டே மற்றும் பலர் நடிக்க, அனிருத் இசையமைப்பில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பீஸ்ட்' படத்தின் டிரைலர் நேற்று மாலை யு டியூபில் வெளியானது.
காப்பி சர்ச்சைகளை இந்த டிரைலர் ஏற்படுத்தினாலும் யு டியூபில் 24 மணி நேரத்திற்குள்ளாக 29 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. 2 மில்லியன் லைக்குகளையும் பெற்றுள்ளது. 24 மணி நேரத்திற்குள் அதிகப் பார்வைகளைப் பெற்ற டிரைலர் என்ற சாதனையையும் இந்த டிரைலர் படைக்க உள்ளது.
விஜய் நடித்த படங்களில் இதற்கு முன்பு வெளியான டீசர்களில் 'மாஸ்டர்' டீசர் 24 மணி நேரத்தில் 19 மில்லியன் பார்வைகளைக் கடந்ததுதான் தமிழ் சினிமா சாதனையாக இருந்தது. டிரைலரைப் பொறுத்தவரையில் விஜய் நடித்த 'பிகில்' டிரைலர் 24 மணி நேரத்தில் 18 மில்லியன் பார்வைகளைப் பெற்றதுதான் சாதனை. இதை இப்போது 'பீஸ்ட்' டிரைலர் முறியடித்து அதிகபட்ச பார்வைகளைப் பெற உள்ளது.
5 மொழிகளில் வெளியாகப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ள 'பீஸ்ட்' படத்தின் தமிழ் டிரைலரை மட்டுமே நேற்று வெளியிட்டனர். மற்ற மொழி டிரைலர்கள் பற்றி எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.