அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை |
தமிழ்ப் புத்தாண்டு தின புதிய படங்களாக தமிழில் தயாராகியுள்ள 'பீஸ்ட்' படமும், கன்னடத்தில் தயாராகியுள்ள 'கேஜிஎப் 2' படமும் மோத உள்ளன. நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'பீஸ்ட்' படம் ஏப்ரல் 13ம் தேதியும், பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடித்துள்ள 'கேஜிஎப் 2' படம் ஏப்ரல் 14ம் தேதியும் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் பான்-இந்தியா படங்களாக வெளியாக உள்ளன.
'பீஸ்ட், கேஜிஎப் 2' படங்களுக்கு இடையில் கடும் போட்டி ஏற்பட்டுள்ள நிலையில் 'கேஜிஎப் 2' பட டிரைலர் வெளியீட்டின் போது இரண்டு படங்களுக்கும் போட்டியில்லை, இரண்டு படங்களையும் ரசித்துப் பாருங்கள் என யஷ் பிராக்டிக்கலாகப் பேசினார். அவருடைய பேச்சு சினிமா ரசிகர்களால் பெரிதும் பாராட்டப்பட்டது.
அதற்கடுத்து 'கேஜிஎப் 2' டிரைலரைப் பாராட்டி 'பீஸ்ட்' இயக்குனர் பதிவிட்டிருந்தார். இப்போது பதிலுக்குப் பதிலாக 'பீஸ்ட்' டிரைலரைப் பாராட்டி 'கேஜிஎப் 2' இயக்குனர் பிரசாந்த் நீல் பாராட்டியுள்ளார்.
“வாவ், இதுவரை இல்லாத அளவிற்கு சிறப்பாக உள்ளது. டிரைலர் பிரமாதமாக உள்ளது” என இயக்குனர் நெல்சன், விஜய் ஆகியோரை டுவிட்டரில் டேக் செய்து பாராட்டியுள்ளார் பிரசாந்த். அவரது பாராட்டிற்கு நெல்சன் நன்றி தெரிவித்துள்ளார்.