பிளாஷ்பேக்: தென்னிந்தியத் திரையுலகின் முதல் பெண் இயக்குநர் 'சினிமா ராணி' டி பி ராஜலக்ஷ்மி இயக்கிய 'மிஸ் கமலா' | சென்னையில் நடந்த 80ஸ் நடிகர், நடிகைகள் ரீ யூனியன் | அரச கட்டளை, தளபதி, நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் - ஞாயிறு திரைப்படங்கள் | இட்லி கடை, காந்தாரா சாப்டர் 1 படங்களின் வசூல் நிலவரம் என்ன? | நயன்தாராவின் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை கைப்பற்றிய ரச்சிதா ராம் | கந்தன் மலை படத்தின், கந்தன் மலையை தொட்டுப்பாரு பாடல் வெளியானது | 'டியூட்' வினியோக நிறுவனம் மாறியது ? | ராஷ்மிகாவின் 'தி கேர்ள் பிரண்ட்' நவம்பர் 7 வெளியீடு | 'பாகுபலி எபிக்' ரிலீஸ் : ஓடிடியில் தூக்கப்பட்ட 'பாகுபலி 1, 2' | ரவி மோகன் நடிக்கும் 'ப்ரோ கோட்' படத் தலைப்பு வழக்கு : நீதிமன்றம் உத்தரவு |
விஷ்ணு விஷால் உடன் இணைந்து மஞ்சிமா மோகன் நடித்த படம் எப் ஐ ஆர். கடந்த மாதம் வெளியான இந்தப் படத்தை மனு ஆனந்த் இயக்கியிருந்தார். இதையடுத்து தனது அடுத்த படத்தை இயக்கும் பணிகளை தொடங்கிவிட்ட அவர், தனது புதிய படத்தில் உதவி இயக்குனராக பணி புரிய விருப்பம் உள்ளவர் தன்னை அணுகலாம் என ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறார்.
இந்நிலையில் தற்போது நடிகை மஞ்சிமா மோகன் அது குறித்து ஒரு பதிவு போட்டு உள்ளார். அதில், மனு ஆனந்திடம் உதவி இயக்குனராக சேர விரும்புவர்கள் அந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று கூறியதோடு, நான் ஏற்கனவே அவரிடத்தில் உதவி இயக்குனராக பணிபுரிய விண்ணப்பித்தேன். ஆனால் என்னை அவர் வேண்டாம் என்று கூறிவிட்டார் என்று இந்த பதிவில் தெரிவித்திருக்கிறார்.
அதையடுத்து மனு ஆனந்த் வெளியிட்ட பதிவில், உங்களது விண்ணப்பத்தை நான் பெறவில்லை. ஒருவேளை ஈமெயிலில் அது தவறி இருக்கலாம் என்று தெரிவித்திருக்கிறார். அதனால் மனு ஆனந்தின் புதிய படத்தில் மஞ்சிமா மோகன் உதவி இயக்குனராக வேலை செய்வார் என்று தெரிகிறது.