ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணையும் படத்தின் இயக்குனர் தேர்வு ? | தனுஷ் 55ல் சாய் அபயங்கர் | சிம்புவிற்கு ஜோடியாக மிருணாள் தாகூர்? | 'இதயம் முரளி' படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியானது! | 'டான்-3'ல் இருந்து வெளியேறிய ரன்வீர் சிங் ; இயக்குனர் எடுத்த அதிரடி முடிவு | திருப்பதியில் தனுஷ் வழிபாடு : மகனை நடிகராக்குகிறாரா... | லோகேஷ் கனகராஜ், அல்லு அர்ஜூன் படத்தில் ஷ்ரத்தா கபூர்? | இறுகப்பற்று படத்தினால் நடந்த நல்லது : விக்ரம் பிரபு நெகிழ்ச்சி | பிப்.,13ல் ‛லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' வெளியாக வாய்ப்பு | ரீ ரிலீஸ் ஆகும் சூர்யாவின் காக்க காக்க |

பல இயக்குனர்கள் ஒருகட்டத்தில் நடிகராக மாறுவதை போலவே இயக்குனர் செல்வராகவனும் தனது புதிய இன்னிங்ஸை தற்போது ஒரு நடிகராக துவங்கியுள்ளார்.. அந்தவகையில் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சாணிக்காயிதம் படத்தில் கதையின் நாயகனாக செல்வராகவன் நடித்துள்ளார். அதேபோல விஜய் நடிக்கும் பீஸ்ட் படத்தில் அரசியல்வாதியாக முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார் செல்வராகவன். ஜித்தன் ரமேஷுக்கு வில்லனாகவும் ஒரு படத்தில் நடிக்கிறார்.
நடிகராக மாறிவிட்டதாலோ என்னவோ, தற்போது தனது உடலையும் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் கவனம் செலுத்தி வருகிறார் செல்வராகவன். சமீபத்தில் தனது புஜபலத்தை காட்டியபடி நிற்கும் புகைப்படம் ஒன்றை சோஷியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார் செல்வராகவன். அதோடு தனது தோற்றத்தையும், ஹேர்ஸ்டைலையும் ஸ்டைலாக மாற்றி உள்ளார். சில மாதங்களுக்கு முன் பார்த்ததற்கும் இப்போது அவரை பார்ப்பதற்கும் வேற மாறி வித்தியாசம் தெரிவதை காண முடிகிறது என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்.




